scroll

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - பட்டுக்கோட்டை வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஆடுகளைத்தான்கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல;ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின். -அம்பேத்கர்

Monday, 14 December 2015



இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி  தொடங்கப்பட்டது  டிசம்பர் 26,1925ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது.  இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இரா.முத்தரசன்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கிறார்.

       
கம்யூனிஸ்இந்தியக் ட் கட்சி
தலைவர்ஏஸ். சுதாகர்ரெட்டி
தொடக்கம்1920
தலைமையகம்அஜோய் பவன், கோட்லா மார்க், புது தில்லி - 110002
செய்தி ஏடுநியூ ஏஜ் (ஆங்கிலம்), முக்தி சங்கர்ஷ் (இந்தி), ஜனசக்தி (தமிழ்)
கொள்கைமார்க்சிசம்
கூட்டணிஇடது முன்னணி
இணையதளம்
http://www.cpindia.org
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தலைவர்ஏஸ். சுதாகர்ரெட்டி
தொடக்கம்1920
தலைமையகம்அஜோய் பவன், கோட்லா மார்க், புது தில்லி - 110002
செய்தி ஏடுநியூ ஏஜ் (ஆங்கிலம்), முக்தி சங்கர்ஷ் (இந்தி), ஜனசக்தி (தமிழ்)
கொள்கைமார்க்சிசம்
கூட்டணிஇடது முன்னணி
இணையதளம்

Thursday, 3 December 2015

ஆரவாரச் சென்னை 

இன்று அலங்கோலமாகியது. 
சிங்காரச் சென்னை 
இன்று சீர்கேட்டின் உச்சம்.
இயற்கை தன் வெப்பத்தை
சீற்றத்தால் தணித்துக் கொண்டது.
தானுண்டு தன்  வேலையுண்டு 
என்றிருந்தவர்கள்  
இன்று தள்ளாடிப் போனார்கள்.
கூவம் சுத்தமாச்சு  என்ற மகிழ்ச்சி 
நிலையாமல் போனது.  
இன்று ஊரே கூவமானது.
தாழ்ந்த, உயர்ந்த என்று 
ஒரு பகுதியோ, மக்களோ 
இன்று சென்னையில் இல்லை.
எல்லோரும் ஓர் நிறை என்றாச்சு.
ஊடகச் செய்திகள் நெஞ்சை
உறைய வைக்கின்றது.
பத்தடி உயரத்தில் கடல் அலை 
பாய்ந்ததை பார்த்திருக்கிறோம்!
பத்தடிக்கும்   மேலே 
நமது வீடுகள்  நீரால் நிறைந்ததே. 
என்ன ஒரு கொடுமை!
இந்த மழை இன்னும் நாலு நாளாம்!! 
பம்பரமாய்ச் சுழன்றவர்கள் 
இன்று பம்மி, பதுங்கி பரிதவித்து.
ஏனிந்த வேதனை! 
இந்த ஆராய்ச்சி இப்போது வேண்டாம்.
நமது உறவுகளை, நட்புக்களை 
களங்கமில்லா உயிர்களை 
காத்திட களம் புகுவோம்.
நெருக்கடி சூழல் உருவாகும்போதுதான் 
உதவும் உள்ளங்களை அறிய முடிகிறது.
பள்ளிகள், கல்லூரிகள்,
அனைத்து மத ஆலயங்கள்,
திரையரங்குகள், நிறுவனங்கள் 
காட்டும் அக்கறை 
கனிந்துருகச் செய்கிறது.
ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள் 
ஏற்றிடும் உழைப்புக்கு
ஆற்றிடும் தொண்டுக்கு  
இருகரம் கூப்புவோம். 
அண்டை மாநிலங்களும், 
திரைத்துறை நடிகர்களும் 
ஊடகவியலாளர்களும் 
காலத்தில் செய்யும் உதவிகளை 
கணக்குப் பார்த்திட வேண்டா!
உதவி செய்யும் உள்ளங்களை 
உளமார வாழ்த்திடுவோம்.
உயிர், உடமைகளை 
இழந்து வாடும் 
நண்பர்களே, உறவுகளே!
இந்த நிலை எளிதில் மாறும்!
இனிதாகவும் மாறும்!. 
கவலை வேண்டாம்!

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

Sunday, 8 November 2015



அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


Friday, 30 October 2015

இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று - அக்டோபர் 31, 1875 சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார். அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார். பட்டேல் 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


வரலாற்றில் இன்று - ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது . U N , என்பது, ஒரு பன்னாட்டு அமைப்பு. உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள,சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. இச்சபையில் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன. அது துவக்கப்பட்ட ஒரு சில நாட்கள் கழித்து - அக்டோபர் மாதம் 30ம் நாள், 1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது


வரலாற்றில் இன்று அக்டோபர் 30 - 1961 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவு நாள் - இன்று அவரது பிறந்த நாளும் கூட - அக்டோபர் 30, 1908. முத்துராமலிங்கத் தேவர் தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.. இந்திய விடுதலைக்குப் பின்னர் மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார். தேவர் ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொண்டு வள்ளலாரின் ஆன்மீக கருத்துக்களை விவரித்து பேசி வந்தார். அவரது பேச்சை ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கேட்டு ரசித்தனர். இவ்வாறு தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது


இன்று இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன்பிறந்த நாள் - அக்டோபர் 27, 1920. குடியரசு தலைவர் பதவி வகித்த ஒரே தலித் சமூகத்தவர் கே.ஆர் நாராயணன்தான். குடியரசு தலைவர் தேர்தலில் அதிக வாக்குகள் அதாவது 9,56,290 வாக்குகளைப் பெற்று ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றவர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி. என். சேஷனை விட மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக இவரும் வாக்களித்தார். இந்தியக் குடியரசின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது இவரே அவ்விழாக்களுக்கு தலைமை வகித்து சிறப்பித்தார்.


1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு ஆகும். ஆரம்பத்தில் இந்த அமைப்பு உருவாக அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாகும். ஐ.நா தலைமையகம் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகம் 39 மாடிகளை கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று 3 முக்கியமான கட்டிடங்கள் உள்ளன.


வரலாற்றில் இன்று - ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த நாள் இன்று இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 1947 ஆகஸ்ட் மாதம் இரு சுதந்திர நாடுகளான போதிலும் இரண்டுக்கும் இடையிலிருந்த மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியின் கீழிருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டு நாடுகளுடனும் சேர விருப்பம் தெரிவிக்காமல் சுயேச்சையான சமஸ்தானமாகவே இருந்துவந்தது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் ராஜ்ஜியம் என்பதைக் காரணம் காட்டி பாகிஸ்தான் அதனை தன்னுடன் இணையுமாறு வற்புறுத்தி வந்தது. அங்கிருந்த தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு கலகங்கள் மூட்டி வந்தது. குறிப்பாக பத்தான் பழங்குடிகள் மூலமாக கலவரங்களை தூண்டியது. அக்டோபர் 20ம் தேதி பத்தான் பழங்குடிகளின் உடைகளில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் ஊடுருவியது. விழித்துக் கொண்ட மகராஜா ஹரி சிங் இந்தியாவின் உதவியை உடனடியாக நாடினார். அப்போது இந்தியாவின் முதலாம் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு எழுத்துபூர்வமாக சம்மதம் அளித்தால் மட்டுமே இந்திய ராணுவம் காஷ்மீருக்குள் நுழையலாம் என்று இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்கினார். ராஜா ஹரி சிங் இவ்வோசனையை ஏற்று "இன்ஸ்ட்ருமென்ட் ஆப் ஆக்சசன்" உடன்படிக்கையில் 1947 அக்டோபர் 26ம் தேதி கையொப்பமிட்டு கொடுத்தார். இந்திய அரசின் சார்பில் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் பிரபு இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டார். அதன்படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் காஷ்மீரில் மன்னராட்சியும் முடிவுக்கு வந்தது. ஒப்பந்த விதிகளின்படி ராஜா ஹரி சிங்குக்கு மன்னர் மான்யம் அளிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீர் மாநில இடைக்கால அரசின் பிரதமராக ஷேக் அப்துல்லா இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.


இரண்டு தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டதை மத்திய அமைச்சர் வி. கே. சிங் ஒரு தெரு நாய் மீது யாரோ கல்லெறிவதற்கு சமம் என்று கூறினார். எதிர்கட்சித்தலைவர்கள் இதனை வன்மையாகக் கண்டித்த பிறகும் அதனை அவர் தவறு எனக் கருதி தனது பேச்சை வாபஸ் வாங்கவில்லை. மாறாக 'ஒருவேளை' தனது பேச்சு யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் அவர்களிடம் மட்டுமே வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். எனவே வி. கே. சிங்கின் பேச்சு யார் யார் மனதைப் புண்படுத்தியுள்ளது என்பதை தெரியப்படுத்துமாறு கோரப்படுகிறார்கள்


வரலாற்றில் இன்று - 1924 அக்டோபர் 25, – இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிஷ் அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டார். தமது வாழ்நாளில் இருபது ஆண்டுக் காலத்தில் நேதாஜி 11 முறை கைது செய்யப்பட்டார். அதில் முதலாவது 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் அவரது ஆதரவாளர்களோடு கைது செய்யப்பட்டது. அப்போது நேதாஜி ஒரு காங்கிரஸ்காரர். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை ஆக்ரோஷமாகவெளிப்படுத்திய நேதாஜி மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது. கைது செய்யப்பட நேதாஜியும் அவரது ஆதரவாளர்களும் பர்மாவின் மண்டலாய் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த மண்டலாய் சிறையானது அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையைப் போன்றது. வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளை அந்தமான் அல்லது மண்டலாய் சிறைகளுக்கு அனுப்புவது ஆங்கிலேய அரசின் வழக்கமாய் இருந்தது. மண்டலாய் சிறையில் தனது முதலாம் சிறைவாசத்தில் போஸ் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். அதன் காரணமாக மூன்று மாத காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். .


வரலாற்றில் இன்று - மருது சகோதரர்களும் அவர்களது குடும்பத்தாரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள். அக்டோபர் 24, 1801. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது மருது சகோதரர்களுடைய வீரமும், நாட்டை காலனியாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக, ஒட்டுமொத்த தமிழகமும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய வீர வரலாறு ஆகும் .


வரலாற்றில் இன்று - அக்டோபர் 23, 1917 - லெனின் அக்டோபர் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார்

போல்ஷெவிக் புரட்சி {Bolshevik revolution) எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution), 1917ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில் (தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். இது கார்ல் மார்க்ஸின்கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப்புரட்சியாகும்.1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் பொதுவுடைமை புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.
அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், பட்டினி என்ற கொடுமையை முற்றிலும் சோவியத் மண்ணிலிருந்து விரட்டியது உள்ளிட்ட பெரும் சாதனைகளை சோசலிச திட்டங்கள் சாதித்தன. சோவியத் ஒன்றியத்தின் இந்த சாதனைகள், மேலை நாடுகளிலும் பிரதிபலித்தது. அங்கு உழைப்பாளி மக்களுக்கு குறைந்த பட்ச உரிமைகளையும் சலுகைகளையும் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியை ஆளும் வர்க்கங்களுக்கு சோவியத் சாதனைகள் ஏற்படுத்தின.


அக்டோபர் 16: வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று! இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது. மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவன். அவரின் நினைவு தினம் இன்று..


மூட்டுக்கட்டு தீர்த்தஹள்ளி எனும் புனைப்பெயர் கொண்ட ரியா விஷாதாவுக்கு பதினேழு வயதுதான் ஆகிறது.பியூசி படிக்கிறார்.இதுவரை ஐந்து நாவல்கள் எழுதியுள்ளார். ஒந்து துண்டு சந்திரன் கட்டுரை தொகுப்புக்காக பால சாகித்ய அகாடமி விருது பெற்றவர். கொல்லப்பட்ட கல்புர்கியின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு அவர் உரையாற்றிய கூட்டங்களிலும் கலந்துகொண்டவர்.கல்புர்கி கொல்லப்பட்டபோது மனமுடைந்து போனவர்,இப்போது எழுந்துள்ள சூழலில் தமக்களிக்கப்பட்ட விருதை திருப்பிக்கொடுத்து தன் கண்டனத்தை பதிவுசெய்துள்ளார். சபாஷ் மகளே...சபாஷ்.


இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் முதுகெலும்பை முறிக்க மோடி அரசின் வியூகம்.

நம் நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய நலனில் அக்கறை செலுத்தவும், அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் பண்ணுகின்ற வகையிலும் 3 அடிப்படையான சட்டங்களாக இருக்கின்றன. அவை 1) இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் (1926),2) தொழில் வேலைவாய்ப்பு (நிலைச் சட்டங்கள்)சட்டம்(1946)-Industrial employment(Standing Orders), மற்றும் தொழில் தகராறு சட்டம் (1947). சட்டங்களை எளிமைப்படுத்துவது என்ற பெயரால் இந்த மூன்று சட்டங்களையும் முழுவதுமாக இல்லாமல் ஆக்கிவிட்டு அதற்குப்பதிலாக இந்த மூன்றிலுள்ள பல முக்கியமான
தொழிலாளர் நலன் சார்ந்த விதிகளை நீக்கிவிட்டு அல்லது நீர்த்துபோகச் செய்துவிட்டு, எஞ்சியுள்றவற்றையெல்லாம் ஒன்றிணைத்து, புதிய தொழிலுறவு சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்காக, அதனுடைய வரைவு மசோதாவை கடந்த ஏப்ரல் 27ல் Ministry of Labour and Empoyment of Government of India வெளியிட்டது.

பல ஆண்டுகளாக நம் நாட்டிலுள்ள முதலாளிகளும், அவர்களின் சார்பாக ஒரு பகுதி அறிவுஜீவிகளும் மற்றும் சில ஊடகங்களும் நம்நாட்டிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதுவரை ஆட்சியிலிருந்தவர்களும், அப்போதைக்கப்போது இந்த சட்டங்களை மாற்ற முயற்சி செய்து வந்தனர். ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அரசாங்கங்களின் இந்த முயற்சியை இதுவரை முறியடித்து வந்தன. ஆனால் வளர்ச்சி என்ற பெயரால் வாக்குகளைப் பெற்று தற்போது ஆட்சியிலிருக்கும் BJPயின் மோடி அரசு கார்பரேட் முதலாளிகளையும், அவர்களுடைய மூலதனத்தையும் கவரவேண்டும் என்ற நோக்கில், அவர்களுடைய இலாபவேட்டைக்குத் தடையாக இருக்கக்கூடிய தொழிலாளர் நலச் சட்டங்களையும், தொழில் உறவுச் சட்டங்களையும் மாற்றியமைத்து, நீர்த்துபோகச் செய்யக்கூடிய நடவடிக்கைக்கு மோடி அரசு தயாராகிவிட்டது. அதற்காக அது இரட்டை வேடம் போட்டு இரண்டு நாக்குகளில் பேச ஆரம்பித்திருக்கிறது. ஒரு புறம், 2014 அக்டோபர் மாதம் Shramev Jayate(Victory to Labour) ' உழைப்புக்கு வெற்றி' என்ற திட்டத்தை மோடியின் மத்திய அரசு ஆரம்பித்துள்ளது: மறுபுறம் தொழிலாளர் அரங்கில் தொழிற்சாலை சட்டம்(1946)Factory act, ஊழியர் மாநில காப்பீட்டு சட்டம் (Employees state insurance act 1948), குறைந்தபட்ச ஊதியச் சட்டம் (Minimum wage act 1948), ஊழியர் வருங்கால வைப்புநிதிச் சட்டம்(Employees' Provident act 1952), அப்ரெண்டீஸ் சட்டம் (Apprentices act 1961) மற்றும் தொழிலாளர் சட்டங்கள்(விதிவிலக்கு)சட்டம் (Labour laws (exemption)act 1986) ஆகிய முக்கியமான சட்டங்களை மாற்றியமைக்க/திருத்தியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. Shrmev Jayate என்ற அந்த ' உழைப்புக்கு வெற்றி' திட்டத்தில் உள்ள 11 உட்பிரிவுகளில் ஒன்று மட்டுமே ஊழியர்களுக்கு ஆதரவான சமூக பாதுகாப்பு திட்டத்தைப் பற்றியும் ஏனைய அனைத்துமே ஊழியர்களுக்கு எதிரான அம்சங்களை மட்டுமே கொண்டுள்ளன. இவை அனைத்தின் உச்சகட்டமாக ஊழியர்களுக்கு ஆதரவான அடிப்படையான 1) இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் (1926),2) தொழில் வேலைவாய்ப்பு (நிலைச் சட்டங்கள்)சட்டம்(1946)-Industrial employment(Standing Orders), மற்றும் 3, தொழில் தகராறு சட்டம் (1947) ஆகியவற்றை இல்லாமல் ஆக்கிவிட்டு அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் சட்டத்திற்கான மசோதாதான் இந்த புதிய தொழிலுறவுச் மசோதாவாகும். சரி அப்படி என்னதான் ஆபத்து இதில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டாமா?

இந்திய தொழிற்சங்க சட்டம் 1926;
இதுவரை உள்ள சட்டத்தின்படி 7 தொழிலாளர்கள் இருந்தால் ஒரு சங்கத்தை ஆரம்பிக்கலாம். இனி புதிய சட்டப்படி அந்த நிறுவனத்தில் உள்ள 10% தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே ஒரு சங்கத்தை ஆரம்பிக்க முடியும்.

மத்திய அரசு இவற்றின் நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ளவிருப்பதால் மாநில அரசாங்கங்களுக்கு உள்ள அதிகாரம் பறிபோகிறது.

ஒரு சங்கத்தின் பதிவை இரத்து செய்வதற்கு ஏற்கனவே 3 காரணங்கள் தேவையாக இருந்தநிலை மாற்றப்பட்டு இனி 5 காரணங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் பதிவை இரத்து செய்யலாம்.

வெளியில்உள்ளவர்கள் 1/3 அல்லது 1/4 என்ற அளவில் நிர்வாகிகளாக இருக்கலாம் என்ற நிலை மாற்றப்பட்டு இனி இரண்டுபேர் மட்டுமே வெளியில் உள்ளவர்கள் சங்க நிர்வாகிகளாக இருக்கலாம்.

தொழில் வேலைவாய்ப்பு (நிலைச் சட்டங்கள்)சட்டம்(1946)-Industrial employment(Standing Orders)
நிலைச் சட்டங்களில் ஏதாவது நிர்வாகம் மாறுதல் செய்ய விரும்பினால் இனி தொழிற்சங்கங்களின் பார்வைக்கும் ஆலோசனைக்கும் அனுப்பத் தேவையில்லை. விதிமீறல்களுக்கு தண்டனையின் தீவிரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்தகராறு சட்டம் (1947)
இனிஇவற்றின் வரம்பிற்குள் மருத்துவமனைகளும் கல்வி நிறுவனங்களும் கொண்டுவரப்படும்.
மத்தியஸ்த பேச்சுவார்த்தை நீதிமன்ற விசாரணை(court of inquiry) மற்றும் லேபர் கோர்ட் ஆகியவை எல்லாம் இரத்து செய்யப்படும்.
நீதிமன்ற வழக்கில் யாராவது ஒரு ஊழியர் நிவாரணம் பெற்றால், அது அவருக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்குப் பொருந்தாது. அவரவர் தனி வழக்குகள் போடவேண்டும்.
100 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் அந்த நிறுவனத்தில் இந்த தொழிற்தகராறு சட்டம் பொருந்தும் என்ற நிலை மாற்றப்பட்டு 300 ஊழியர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும்.(300 பேர்வரை உள்ள நிறுவனத்தில் அந்த முதலாளி நினைத்த மாத்திரத்தில் யாரையும் வேலையில் இருந்து நீக்கலாம். யாரும் கேள்வி கேட்கமுடியாது. நம் நாட்டில் தொழிலாளர்களில் 60%க்கு மேல் இது போன்ற தொழிற்சாலைகளில்தான் வேலைபார்க்கின்றனர் என்பது கவனத்திற்குரியது)

நாடு சுதந்திரம் அடைந்ததற்குப்பின் இந்தியத் தொழிலாளி வர்க்கம் இப்படிப்பட்ட ஆபத்தைச் சந்தித்ததில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் இந்தியத் தொழிலாளிகளுக்குப் பேராபத்தாய் முடியும். நமது நாட்டு மக்களின் அமைதியான வாழ்வுக்கு எதிராக பல்வேறு சாதி, மத, இன அடிப்படையில் மோதல்கள் தூண்டிவிடப்பட்டிருக்கும் நிலையில், கருத்துரிமைகள் நசுக்கப்படுகின்ற நிலையில் இவற்றை எதிர்கொள்ளவேண்டிய தொழிலாளி வர்க்கத்தின் முதுகெலும்பை முறிப்பதற்கும் வியூகம் வகுக்கப்பட்டுவிட்டது. இவற்றை எதிர்கொள்ளவேண்டியது நமது அடிப்படை கடமையாகும்.

Monday, 12 October 2015


எவ்வளவு அற்புதமான,  நேர்த்தியான, 
உண்மையான வார்த்தைகள்!                                 அவசியம் படியுங்கள்!


மாற்றம் நிகழும்-அது மிக இயல்பாக… மழை பொழிவதுபோல!

அவர் உலக நாயகன் என்பதில் சந்தேகமில்லை. பிறந்த நாட்டில் இருக்கும்போது, அவர் மூடின முத்து - அதாவது தேர்தல் பிரச்சார மேடையில் நிற்காத நேரத்தில். மூடிய அறைக்குள் அமர்ந்து ‘மன் கீ பாத்’ சொற்பொழிவை ஒலிப்பதிவு செய்யாத நேரத்தில்… மக்கள் மன்றத்தில் என்னதான் அமளி நடக்கட்டுமே - முக்கியத் துறையின் அமைச்சர் பற்றி சர்ச்சை எழட்டுமே, மாநில பாஜக அரசுகளின் ஊழல்களைப் பற்றி புகார்கள் வெடிக்கட்டுமே - ஊஹும் அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல கண்ணுக்குத் தெரியாமல் போவார். அவரது அமைச்சரவையில் உள்ள சில பல உருப்படிகள் சகட்டுமேனிக்குச் சிறுபான்மையினரை அவமதிக்கும் வகையில் அவதூறு பேசி உளறட்டுமே - அவர் தாமரை மேல் ஒட்டாத நீர் - பத்மபத்ர ந வாம்பஸா… பல்கலைக்கழக உயர் நியமனங்கள், புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் அமர்த்தப்பட்ட தகுதியற்ற தலைவர் பற்றிய விவகாரம், அதை எதிர்க்கும் மாணவர்களின் போராட்டம்... நாடு முழுவதும் அறிஞர்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் - எதுவும் அவரது செவியில் விழாது. அவர் எட்டாத உயரத்தில் இருப்பவர். தந்தக் கோபுரத்தில். அங்கிருந்து அவரது பார்வைக்குக் காலடி மண் தெரிய வாய்ப்பில்லை. அவரது பார்வையில் படுவது அகன்று விரிந்த கடல் பரப்பு. பாற்கடல். அதில் மையமாக அவர் - சயனித்திருக்கும்  "மஹா விஷ்ணு" எத்தகைய தெம்பூட்டும் அது! 
மோடி மந்திரம்
அயல்நாட்டுப் பயணங்கள் சிலிர்ப்பூட்டும் விஷயங்கள். பாதுகாப்பு உணர்வைத் தருபவை. நியூயார்க் பார்த்திருக் கிறீர்களா? மாடிசன் ஸ்க்வேர் கார்டன்? அடேயப்பா, அங்கே வந்திருந்த மாபெரும் கூட்டத்தில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் லட்சக்கணக்கில் கூடி ‘மோடி… மோடி!” என்று கைத்தட்டி நிறுத்தாமல் கோஷமிட்டபோது கண்களில் நீர் நிறைந்தது. பெருமிதத்தில் மார்பு இன்னும் விரிந்து நிமிர்ந்து நின்றது. அதையும் மிஞ்சப் பார்த்த ஷாங்காய் நகரக் கூட்டத்துக்கு சீனாவின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் அங்கு வாழும் இந்தியர்கள் வந்தார்களே? இதற்கு முன் யாருக்கு அத்தகைய வரவேற்பு கிடைத்திருக்கும்? ‘‘கனவுகூடக் காண முடியாத பின்புலத்திலிருந்து வந்தவன் நான், உங்கள் முன் நிற்கிறேன்’’ என்றபோது கூட்டம் எப்படி ஆர்ப்பரித்தது! ஓ, மறந்துவிட்டது. ஆஸ்திரேலியப் பயணத்தில், சிட்னி அல்ஃபோன்ஸ் அரீனாவில் எப்படிப்பட்ட அரங்க ஏற்பாடு! மத்தளமும் சங்கும் முழங்க வரவேற்பு. கடல்போலக் கண்முன் விரிந்த ஜனத்திரள். ஆஹா, அந்த ஆனந்த உணர்வை அனுபவத்தில்தான் அறிய முடியும். இப்போது வேறு திசையிலும் திணறடிக்கும் வரவேற்பு. துபாயின் பிரபல கிரிக்கெட் மைதானத்தில் 50,000 பேர் கூடியிருந்தார்கள். ‘மோடி… மோடி!’ என்று மந்திரம்போல் இசைத்தார்கள். இந்தியில் பேசப்பேச ஒவ்வொரு வரிக்கும் ஆர்ப்பரித்தார்கள்.
மோடியின் அபய ஹஸ்தம்
வெளிநாடுகளில், அங்கு வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பேசுவது வெகு சுலபம். சவுகரியமாக வாழும் என்.ஆர்.ஐ. கூட்டத்தின் உற்சாக ஆர்ப்பரிப்பு போதையைத் தரும். தடுமாற வைக்கும். அவருக்காக வந்த கூட்டமல்லவா? அலங்கார வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. ‘‘வள்ளல் பெருமக்களான உங்களது உபயத்தால்தான் இந்திய நாட்டின் பொருளாதாரம் தடம்புரளாமல் இருக்கிறது’’ என்ற வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை.
‘‘இத்தனை ஆண்டுகள் இந்தியா இருண்டிருந்தது. ஊழல் கறை படிந்திருந்தது. நீங்கள் அதை நினைத்து வெட்கப்பட்டீர்கள். இனி நீங்கள் தலை நிமிரலாம். உங்கள் பிறந்த மண்ணின் வாசல் திறந்திருக்கிறது. உங்கள் வளங்களை அங்கு கொட்டுங்கள். பயப்படாமல் வர்த்தகம் செய்யுங்கள்…’’
மோடி என்ற மகத்தான தனி மனிதரின் அபய ஹஸ்தம் உங்களைக் காக்கும் என்கிற சேதி வார்த்தைகளால் சொல்லப்படாமல் அவர்களைப் பரவசப்படுத்தும். அவர்களால் புரிந்துகொள்ள முடிந்த ஹிந்துஸ்தானி மொழி. இந்திய மொழி செவியில் விழும்போது நாடி நரம்பெல்லாம் உசுப்பிவிடுவதுபோல் இருக்கிறது. நல்ல வேளை புரியாத மொழி பேசும் அறிவுஜீவி இல்லை அவர். அறிவுஜீவிகளுடன், கலைஞர்களுடன் அவருக்குத் தொடர்பு இல்லை. வார்த்தைகளால் பின்னல் பின்னித் தோரணம் கட்டுகிறார். எத்தகைய கனவுகளை விரிக்கிறார்? அவருடைய உடையைப் பார்த்தீர்களோ? எத்தனை நேர்த்தி! ஒவ்வொரு நாட்டுக் கூட்டத்துக்கும் அதற்கு ஏற்ற உடை. அதற்குப் பொருத்தமாக அங்கவஸ்திரம். இத்தனை ஸ்மார்ட்டாக எத்தனை இந்தியப் பிரதமர்களைப் பார்த்திருக்கிறீர்கள்?
என் பலம் தெரியாது
அவருக்குத் தெரியும், இந்த லாகிரி சொற்ப நேரம்தான் நிலைக்கும். இதுவரை நீங்கள் மேற்கொண்ட பயணங்களால் நாட்டுக்கு என்ன லாபம் கிடைத்தது என்று பொருளாதார நிபுணர்கள் கேட்பார்கள். கேட்கட்டும்; விவாதத்துக்கு அவர் தயாரில்லை. அவருக்குப் பேசித்தான் பழக்கம். கேட்டுப் பழக்கமில்லை. கேட்க வேண்டிய அவசியமில்லை. எதிர்பாராத அளவு தேசம் தழுவிய வெற்றியைக் கட்சிக்குத் தனது பேச்சுத் திறமையால், பிரச்சாரத் திறமையால் கிடைக்கவைத்து ஆட்சியில் அமர்த்தியாகிவிட்டது. இன்னும் நான்கு ஆண்டுகள் அவரை அசைக்க முடியாது. பேசுபவர் பேசட்டும். வேலையற்றவர்கள். தோற்றுப்போனவர்கள். பொது மேடையில் அவர்களை நார் நாராகக் கிழித்துப் போடுவது சிரமமில்லை. மக்கள் அவரது ஒவ்வொரு வார்த்தையையும் நம்புவார்கள். வாக்குகளை அப்படித்தான் அள்ள முடியும். நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் அல்ல.
அந்தப் பொடியன் என்ன சொன்னான்? நாடாளு மன்றத்துக்கு வந்து கேள்விகளைச் சந்திக்க மோடிக்குத் தைரியமில்லை என்றான். என் பலம் அவனுக்குத் தெரியாது. பல திறமையான இளம் தலைவர்கள் கொண்ட பழமையான கட்சி அவனை நம்பித் தொங்கிக் கொண்டிருக்கிறது. நமது அதிர்ஷ்டம் அது. வெற்றுக் காற்று. என் சகாக்களே அவனை ஊதி வெளியேற்றுவார்கள்.
அது சரி... விமானத்திலிருந்து தரையிறங்கிவிட்டீர்களா? இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்? எப்படி நிறைவேற்றப்போகிறீர்கள்?
நீங்கள் மேடையில் பேசும் பேச்சுக்கள், மன் கீ பாத் பிரசங்கங்கள் யாவும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தொடுவதில்லையே? ஏன்? வானத்தை வில்லாய் வளைப் பேன் என்கிறீர்கள். எப்படி? என்னதான் உங்கள் திட்டம்? அல்லது எண்ணம்? யாருக்கும் தெரியாது. வருஷத்துக்கு ஒரு முறை நீங்கள் செங்கோட்டையில் நின்று முழங்கும் சுதந்திர தினப் பேச்சுக்குக் காத்திருக்க வேண்டுமா?
பீதியளிக்கும் அலட்சியம்
உங்கள் உடல்மொழி தெரிவிக்கும் சமிக்ஞை ஆபத்தா னது. நார்சிஸ (சுயமோகம்) எல்லையைத் தொடுவது. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அரசு இல்லை என்கிற மிதப்பு , உங்கள் மவுனம் வெளிப்படுத்தும் அலட்சியம் பீதியளிக்கிறது. இந்தப் பயம் என்னுடைய பிரத்தியேக உணர்வு இல்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல், அறிவுக்கூடங்களில் நுழைந்திருக்கும் அடிப்படைவாதம், அமைச்சர்களின் தன்னிச்சையான பிடிவாதங்கள், எதிர்ப்பை அமுக்கும் மூர்க்கம், எல்லாவற்றையும் அங்கீகரிக்கும் உங்கள் மவுனம் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. மக்கள் கவனிப்பார்கள். இன்றில்லாவிட்டால் நாளை. அவர்கள் வெறும் வாக்கு எண்கள் அல்ல. உயிர்த் துடிப்புள்ள, எதிர்பார்ப்புகள் நிறைந்த ஜீவன்கள். அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை உலக வரலாறு சொல்லும்.
ஜான் ஸ்டீன்பெக் எழுதிய ‘கிரேப்ஸ் ஆஃப் ராத்’ என்ற நாவலில் கேஸி என்ற ஒரு கதாபாத்திரம் ஏமாற்றமும் விரக்தியும் மிகுந்த காலகட்டத்தில் சொல்லும், ‘அது நிகழும். மக்கள் ஒன்றாகச் சிந்தித்து எழும் காலம் வரும், மாற்றம் விளைவிக்க. அது மிக இயல்பாக நிகழும். மழை பொழிவதுபோல!’
நான்கு ஆண்டுகளில் அது நிகழலாம் - மிக இயல்பாக - மழை பொழிவதுபோல.
- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.


சாகித்ய அகாடமி நிர்வாக குழு 23–ந்தேதி அவசரமாக கூடுகிறது
மேலும் 6 எழுத்தாளர்கள் விருதை ஒப்படைக்க முடிவு: 

புதுடெல்லி
15 எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளதால், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க சாகித்ய அகாடமி நிர்வாகிகள் குழுவின் அவசர கூட்டம் 23–ந்தேதி நடக்கிறது. மேலும் 6 எழுத்தாளர்கள் விருதுகளை ஒப்படைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சாகித்ய அகாடமி விருதுகள்
கர்நாடக மாநிலத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற பகுத்தறிவு எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சமீபத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது எழுத்தாளர்கள் மத்தியிலும், சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். நாட்டில் மத ரீதியான மோதல்கள் அதிகரித்து இருப்பதாலும், சகிப்புத்தன்மை குறைந்து வருவதாலும், கல்புர்கி படுகொலையில் சாகித்ய அகாடமி மவுனமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விருதுகளை ஒப்படைப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
15 எழுத்தாளர்கள்
இதுவரை 15 எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர். நேற்று மேலும் 6 எழுத்தாளர்கள் விருதுகளை ஒப்படைக்க முடிவு செய்தனர். காஷ்மீர் எழுத்தாளர் குலாம்நபி காயல், கன்னட எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீநாத், ராஜேஷ் ஜோஷி, இந்தி எழுத்தாளர் மங்களேஷ் டப்ரால், வார்யம் சாந்து, ஜி.என்.ரங்கநாதராவ் ஆகியோர் இந்த முடிவை எடுத்தனர்.
இதில் மங்களேஷ் டப்ரால், ராஜேஷ் ஜோஷி, ஸ்ரீநாத் ஆகியோர் நேற்றே தங்கள் விருதுகளை ஒப்படைத்துவிட்டனர். மற்றவர்கள் தங்கள் முடிவை சாகித்ய அகாடமிக்கு தெரிவித்துள்ளனர். மும்பையை சேர்ந்த உருது எழுத்தாளர் ரஹ்மான் அப்பாஸ், குஜராத்தை சேர்ந்த பிரபல கவிஞர் அனில்ஜோஷி ஆகியோரும் நேற்று தங்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர்.
பேனா–துப்பாக்கி குண்டு
குலாம்நபி காயல் கூறும்போது, ‘‘நாட்டில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பற்றவர்களாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் உணர்கிறார்கள். பேனா இருக்க வேண்டிய இடத்தில், இப்போது துப்பாக்கி குண்டுகள் பாய்கிறது’’ என்றார்.
எழுத்தாளர்கள் டப்ரால், ஜோஷி ஆகியோர் கூறும்போது, ‘‘கல்புர்கி படுகொலைக்கு சாகித்ய அகாடமி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நாட்டில் இப்போதுள்ள சூழ்நிலைக்கு கண்டனம் தெரிவிப்பது அகாடமியின் கடமை’’ என்றனர். ஜோஷி உள்பட சிலர் விருதுடன், தங்கள் பரிசு தொகையையும் திருப்பி அனுப்பியதாக கூறியுள்ளனர்.
அதோடு அகாடமியின் நிர்வாகிகள் குழு இந்த பரிசுத்தொகையை என்ன செய்வது? என்பது குறித்து இப்போதே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
23–ந்தேதி அவசர கூட்டம்
எழுத்தாளர்கள் தொடர்ந்து தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருவதால் சாகித்ய அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் சாகித்ய அகாடமியின் நிர்வாகிகள் குழுவின் அவசர கூட்டம் 23–ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துவருவதால், இந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த அவசர கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டாலும், அகாடமியின் பெரும்பாலான நிர்வாகிகள் தற்போது டெல்லிக்கு வெளியே இருப்பதால் 23–ந்தேதி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அகாடமியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

Sunday, 11 October 2015

மறைந்தார் மனோரமா!


          திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 1943ம் ஆண்டு மே, 23 ம் தேதி பிறந்தவர் கோபி சாந்தா. சினிமாவுக்காக மனோரமா என்று பெயர் மாற்றப்பட்டார். ராஜமன்னார்குடியில் 6ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது, 12 வயதில் நாடகத்தில் நடிக்கத் துவங்கினார். பின்னர், 1960ல் 'களத்துார் கண்ணம்மா' என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் கால்பதித்தார். தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து, 1000 படங்களுக்கும் மேல் நடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்.  தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடகத்திலும்,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி மற்றும் குணச்சித்திரம் உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி, 300க்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியிருக்கிறார். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.  'பத்ம ஸ்ரீ' மற்றும் தமிழக அரசின் 'கலைமாமணி' மற்றும் தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். சினிமா ரசிகர்களால் 'ஆச்சி' என்று அழைக்கப்பட்டவர். கடைசியாக, 'சிங்கம் 2' படத்தில் நடித்திருந்தார். விரைவில் தயாரிக்கப்படும் 'சிங்கம் 3' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

Tuesday, 15 September 2015

காவிரி நீரைப் பெற மத்திய அரசை நிர்பந்திப்பது அவசியம்

தஞ்சாவூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
காவிரியில் தமிழகத்துக்குக் கர்நாடக அரசு ஜூன் மாதம் முதல் இதுவரையில் 70 டி.எம்.சி. தண்ணீர்தான் வந்துள்ளது. நமக்குரிய மீதமுள்ள தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும்.
தமிழக முதல்வர் அனைத்து கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கத் தலைவர்களையும் அழைத்து சென்று பிரதமரைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமருக்குக் கடிதம் எழுதுவதைவிட நேரில் சென்று நிர்பந்தம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளின் தற்கொலை சாவைத் தடுக்க முடியாது.
டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சம்பா சாகுபடி மேற்கொள்ள வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டால்தான் கடைமடைக்குச் சென்றடையும்.
ஆனால், மழைக் குறைவு காரணமாகவும், தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. முளைத்த பயிர்களும் கருகத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் முறைப் பாசனம் அமல்படுத்துவது சரியல்ல.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அளவில் மக்கள் சந்திப்பு பிரசார பேரியக்கம் வெள்ளிக்கிழமை (செப்.11) தொடங்கப்படவுள்ளது. இந்த பிரசாரம் செப். 17-ம் தேதி நிறைவடைய உள்ளதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் அன்று மாலை நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதில், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் அதுல்குமார் அஞ்சான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார் துரைமாணிக்கம்.
சங்கத்தின் மாவட்டச் செயலர் பா. பாலசுந்தரம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tuesday, 4 August 2015



In conversation:R.Mutharasan, general seceratary, Tamil Nadu Agricultural Labour Union, addressing presspersons in Thanjavur on Tuesday.Photo:B.Velankanni Raj
In conversation:R.Mutharasan, general seceratary, Tamil Nadu Agricultural Labour Union, addressing presspersons in Thanjavur on Tuesday.Photo:B.Velankanni Raj
Tamil Maanila Vivasaya Thozhilalar Sangam has appealed to the Chief Minister, Jayalalithaa, to enact a law for issuing house site pattas to those living on poramboke lands for more than 10 years, during the silver jubilee celebrations of the Tamil Nadu Assembly on October 29.
A resolution to this effect has been adopted at the body’s administrative members, district presidents, and secretaries meeting held here on Tuesday. Briefing presspersons about the resolutions, R.Mutharasan, general secretary of the sangam said that the Assembly has enacted historical laws in the past. It has a rich history of lively debates and healthy democratic traditions. Laws enacted pertained to welfare of Tamil people not only in the State but also elsewhere in other countries, social justice, and protecting the rights of Tamils living abroad. The issue with respect to house site pattas has been continuing for years despite various measures taken by the government. Legal protection should be given to poor people in this connection and make them live in their own house sites. Building houses at a cost of Rs.3 lakhs with basic amenities should also be included in the law, Mr.Mutharasan said.
The sangam also appealed to the Prime Minister Manmohan Singh to dismiss Union Ministers S.M.Krishna and Veerappa Moily for making statements contradictory to the stand taken by the Centre on the Cauvery issue. In the recently held Cauvery River Authority meeting, Prime Minister had asked Karnataka to release 9,000 cusecs of water per day. But the two ministers are making statements contradictory to PM’s statement.
Mutharasan said that the sangam thanked the Chief Minister for getting an order from Supreme Court for getting 9,000 cusecs of water.
The sangam also appealed to the State government to pursue the case related to the law to make people belonging to various castes as archakas in the Supreme Court. Though a law had been enacted in the State and youth belonging to various castes have been trained in ‘agama’ practices and rules, they could not be appointed because of the case. K.Thangamani, State president of the association and former MLA, and Chandrakumar, AITUC vice-president, were present.

ஆறுகளை அழித்துவிட்டு எங்கே போகப்போகிறோம்?

மது வியாபாரத்தில் புழங்குவதைவிட அதிகப் பணம் புழங்குகிறது மணல் கொள்ளையில்.
பாரதி, ‘‘காவிரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய ஆறுபலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு’’ என்று பாடினார். இது அடிமை இந்தியாவில் பாடப்பட்டது. இன்றைக்கு பாரதி இருந்தால், தமிழ்நாட்டை இதே நதிகளின் அடையாளத்துடன் சேர்த்து அவரால் பாட்டு எழுத முடியுமா? சந்தேகம்தான். ஏனென்றால், விடுதலைக்குப் பிந்தைய இந்த 67 ஆண்டுகளில், தமிழ்நாட்டிலுள்ள 34-க்கும் அதிகமான ஆற்றுப் படுகைகள் குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைந்து கிடக்கின்றன; பெரும்பாலானவை வறண்டுவிட்டன. ஆற்றுப்படுகைகளை ஒட்டியுள்ள ஊர்களெல்லாம்கூட நிலத்தடி நீராதாரத்தை இழந்து வெளியிலிருந்து நீரைப் பெறும் அவலநிலை உருவாகியிருக்கிறது.
இச்சீரழிவு இயற்கையாக ஏற்பட்டது அல்ல. கொள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. மணலும் தண்ணீரும் உற்பத்திசெய்யப்படும் பொருட்கள் அல்ல; இயற்கையின் கொடை. இயற்கையாகக் கிடைக்கும் செல்வங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, பராமரித்து, பாதுகாத்து அடுத்துவரும் சந்ததிகளுக்குக் கையளிக்க வேண்டியது உயிர்களின் கடமை. விலங்குகள்கூட அப்படித்தான் இருக்கின்றன. மனிதர்களோ பேராசையில் சூறையாடிக்கொண்டிருக்கிறோம். உலகெங்கும் இப்படித்தான் என்றாலும், நம்மூர் நிலை கூடுதல் மோசம் என்று தோன்றுகிறது.
அரசின் நிலைப்பாடு
தமிழ்நாட்டில் மணல் அள்ளுவதை முறைப்படுத்தி அரசுப் பொறுப்பில் நடத்துவதென்று 2003-ல் முடிவெடுக்கப்பட்டது. ஆறுகளில் மணல் குவாரிகள் அமைக்கும் பொதுப்பணித் துறை பொறியாளரின் பரிந்துரை, மாவட்ட ஆட்சியாளர் அனுமதியோடு ஊராட்சியின் அனுமதியையும் பெற வேண்டும்.
மணல் ஒரு சிறுகனிமம் என்பதால், இது தொடர்பான சில விதிகள் / வழிகாட்டுதல்கள் உள்ளன. 1. குவாரியின் எல்லை வெளிப்படையாக வரையறுக்கப்பட வேண்டும். 2. இரவில் மணல் எடுக்கக் கூடாது; வேலை நேரம் குறிப்பிடப்பட வேண்டும். 3. ஒரு மீட்டர் (3 அடி) ஆழத்துக்கு மேல் ஆற்றில் மண் தோண்டக் கூடாது. 4. ஆற்று நீர்ப்போக்கைத் தடுத்து குறுக்கே சாலை அமைக்கக் கூடாது. 5. குடிநீர் நிலையத்தின் 500 மீட்டர் சுற்றளவில் மணல் எடுக்கக் கூடாது (பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1884-ல் ஆறுகள் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது. ஆற்றின் இருபுறமும் 100 அடிக்குள் தனியார் நிலங்களில் கூட மண் அல்லது மணல் அள்ளக் கூடாது என்று சட்டம் போடப்பட்டது). 7. பாலங்கள் அருகே மணல் எடுக்கக் கூடாது. 8. ஆற்றுக்கரைகள் சேதப்படுத்தப்படக் கூடாது (ஆறுகளில் கட்டப்பட்டுள்ள குடிநீர் உறிஞ்சிக் கிணறுகளில் 132 கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. புனரமைப்புக்காக ரூ. 3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாக, 2011-2012 மானியக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது). 9. ஜேசிபி, பொக்லைன் போன்ற கனரக ராட்சத இயந்திரங்களுக்கு மாவட்ட ஆட்சியாளரின் அனுமதி பெற வேண்டும் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. இத்தனையும் நம்மூரில் அரசுத் துறை அதிகாரிகளின் இசைவோடு மீறப்படுகின்றன.
மணல், வெறும் மணல் மட்டும்தானா?
மணல் கொள்ளைக்கு மிக முக்கியமான அடிப்படை என்னவென்றால், நம் அரசிடமும் மக்களிடமும் ‘என்ன சாதாரண மண்தானே?’ என்று மணல் மீது இருக்கும் மோசமான பார்வையும் மதிப்பீடுமே. இது பெரிய தவறு. ஒரு கன அடி மணல் தயாராவதற்கு நூறாண்டுகளுக்கு மேலாகும் என்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள். பிரிட்டிஷ் காலத்தில் ஆற்றுக்கரையிலிருந்து 100 அடி இடைவெளியில் கிணறுகள்கூட வெட்ட அனுமதி கிடையாது. மணல் ஒரு அரிய சொத்து என்பதே காரணம். மேலும், மணல் குவாரிகளால் ஆழமாக மணல் எடுக்கப்பட்டால், வெள்ளம் வரும் காலங்களில் நீர் தங்காமல் வெள்ளப்பெருக்கு அதிகமாகும்; அதேபோல், நீண்ட காலத்துக்கு ஆற்றில் தண்ணீர் தங்காமல் சீக்கிரமாக வடிந்துவிடும். நாம் இதன் இரு விளைவுகளையும் அனுபவிக்கிறோம். வெள்ளத்தையும் எதிர்கொள்கிறோம்; வறட்சியையும் எதிர்கொள்கிறோம். கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?
அண்டை மாநிலங்களைப் பார்ப்போம்
கடந்த 2002 முதல் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களில் மணல் அள்ளுவதற்குக் கட்டுப்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. அவ்வளவு சீக்கிரம் ஆற்றில் யாரும் கை வைக்க முடியாது. குறிப்பாக, கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதி கிடையாது.
தமிழ்நாட்டின் காவிரி, பாலாறு நதிகளை விட ஆந்திரத்தின் கோதாவரி, கிருஷ்ணா ஆகியவை பெரிய நதிகள். அதேபோல, கேரளத்தின் பெரியாறு மற்றுமுள்ள ஆறுகள் தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளைக் காட்டிலும் பெரியவை. ஆனால், அங்கே ஆறுகள் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை இங்கு நம்மிடம் இல்லை. கொடுமையின் உச்சம், இங்குள்ள ஆறுகளை நாசப்படுத்தி, மணலைச் சுரண்டி லாரி லாரியாக அங்கு அனுப்புவது. நம் சதையை நாமே அறுத்து விற்றுக் காசு சம்பாதிப்பதுபோலத்தான் இது. ஆனால், செய்கிறார்கள். காரணம் என்ன? பணம். ஆம். தமிழகத்தில் மதுவில் புழங்கும் பணத்தின் மதிப்பு நமக்குத் தெரியும். டாஸ்மாக் கடைகளின் இந்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 29,672 கோடி. ஆனால், ஆற்று மணல் கொள்ளையில் புழங்கும் பணத்தின் மதிப்போ இதைவிடப் பல மடங்கு அதிகம். 2003 04 முதலான 2012 13 வரையிலான அதிகாரபூர்வமாக தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் மணல் எவ்வளவு தெரியுமா? 1.95 கோடி லோடுகள்! கற்பனைசெய்துபாருங்கள்… எவ்வளவு பணம் இதில் புழங்கும் என, அதிகாரபூர்வமாகவும் திருட்டுத் தனமாகவும்!
எங்கே தண்ணீர்?
ஏற்கெனவே பெரிய அளவில் நீர் வளம் இல்லாத மாநிலம் இது. இருக்கும் நீராதார வளங்களையும் அண்டை நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதில் ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அப்படிக் கண்ணீர் விட்டு வாங்கும் தண்ணீரையும் பாதுகாக்க முடியாமல் ஆற்று மணல் கொள்ளையர்களால் இழந்தோம் என்றால், எதிர்காலத்தில் தண்ணீருக்கு எங்கே போவது? குடிக்கவே தண்ணீர் இல்லாத ஊரில் விவசாயம் எப்படி நடக்கும்? விவசாயம் இல்லாத ஊரில் எதைத் தின்று உயிர் பிழைப்போம்?
நம் ஆறுகளைப் பாதுகாக்க மக்கள் கரம் கோத்து களம் இறங்க வேண்டிய கடைசித் தருணம் இது. இப்போதும் விட்டோம் என்றால், எப்போதும் இல்லை!
இரா. நல்லகண்ணு, சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர், மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருபவர். தொடர்புக்கு: cpi.tamilnadu@gmail.com



கலாமின் வங்கி இருப்பு எவ்வளவு?

உதவியாளர் பொன்ராஜ் தகவல்

எஸ்.முஹம்மது ராஃபி


மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சொத்துகள், அவரது கடைசி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ் `தி இந்து’விடம் கூறியதாவது:
கலாம் தன் சம்பாத்தியத்தில் வாங்கிய பெங்களூரு வீடு அவரது காலத்திலேயே விற்கப்பட்டுவிட்டது. தற்போது ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீடு கலாமுக்காக அவரது தந்தை ஜெயினுலாபுதீன் விட்டுச் சென்றது. அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் பொறுப்பில் கலாம் கொடுத்து விட்டார்.
கலாம் உயில் எழுதி வைத்தி ருந்தாரா? அவரது கடைசி காலத்தில் வங்கி இருப்பு எவ்வளவு என்பது குறித்து எனக்கு துல்லியமாகத் தெரியாது. கலாமுக்கு பென்ஷன் பணம் வந்து கொண்டிருந்தது. அப்துல் கலாம் எழுதிய புத்தகங்களுக்கு ராயல்டி வந்து கொண்டிருக்கிறது.
கலாமுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள்தான் அவருடைய ஒரே சொத்து. இந்த புத்தகங்கள் அனைத்தும் டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் உள்ளன. கலாம் டெல்லியில் தங்கியிருந்த ராஜாஜி மார்க் இல்லத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் கல்வி மையமாக்க வேண்டும் என்பதே கலாமின் உறவினர்கள், நண்பர்களின் விருப்பமாக உள்ளது.
ஏனென்றால் டெல்லியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஏற்ற இடம் கிடையாது. இதற்கு கலாமின் டெல்லி இல்லம் பொறுத்தமானதாக இருக்கும் என்றார் பொன்ராஜ்.

SITE MAINTAINED BY

S . சிவசிதம்பரம்