scroll

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - பட்டுக்கோட்டை வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஆடுகளைத்தான்கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல;ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின். -அம்பேத்கர்

Sunday, 11 October 2015

மறைந்தார் மனோரமா!


          திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 1943ம் ஆண்டு மே, 23 ம் தேதி பிறந்தவர் கோபி சாந்தா. சினிமாவுக்காக மனோரமா என்று பெயர் மாற்றப்பட்டார். ராஜமன்னார்குடியில் 6ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது, 12 வயதில் நாடகத்தில் நடிக்கத் துவங்கினார். பின்னர், 1960ல் 'களத்துார் கண்ணம்மா' என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் கால்பதித்தார். தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து, 1000 படங்களுக்கும் மேல் நடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்.  தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடகத்திலும்,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி மற்றும் குணச்சித்திரம் உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி, 300க்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியிருக்கிறார். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.  'பத்ம ஸ்ரீ' மற்றும் தமிழக அரசின் 'கலைமாமணி' மற்றும் தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். சினிமா ரசிகர்களால் 'ஆச்சி' என்று அழைக்கப்பட்டவர். கடைசியாக, 'சிங்கம் 2' படத்தில் நடித்திருந்தார். விரைவில் தயாரிக்கப்படும் 'சிங்கம் 3' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

No comments:

Post a Comment

SITE MAINTAINED BY

S . சிவசிதம்பரம்