எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: நடிகர்களால் மாற்றமும் ஏற்படப் போவதில்லை: தா.பாண்டியன்
மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்: மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல கட்சிகளின் நிலை தேர்தலுக்குப் பிறகு மாறும். ஆனால், தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற கட்சிகளும் இடதுசாரிகளும் இணைந்து மூன்றாவது அணி உருவாகி ஆட்சியைக் கைப்பற்றும்.
தமிழகத்தில் திரைப்பட நடிகர்களால் தேர்தலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னைக்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும். மின்வெட்டு சரியாகாமல், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படப் போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment