scroll
Friday, 30 October 2015
வரலாற்றில் இன்று - அக்டோபர் 23, 1917 - லெனின் அக்டோபர் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார்
போல்ஷெவிக் புரட்சி {Bolshevik revolution) எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution), 1917ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில் (தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். இது கார்ல் மார்க்ஸின்கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப்புரட்சியாகும். 1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் பொதுவுடைமை புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.
அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், பட்டினி என்ற கொடுமையை முற்றிலும் சோவியத் மண்ணிலிருந்து விரட்டியது உள்ளிட்ட பெரும் சாதனைகளை சோசலிச திட்டங்கள் சாதித்தன. சோவியத் ஒன்றியத்தின் இந்த சாதனைகள், மேலை நாடுகளிலும் பிரதிபலித்தது. அங்கு உழைப்பாளி மக்களுக்கு குறைந்த பட்ச உரிமைகளையும் சலுகைகளையும் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியை ஆளும் வர்க்கங்களுக்கு சோவியத் சாதனைகள் ஏற்படுத்தின.
இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் முதுகெலும்பை முறிக்க மோடி அரசின் வியூகம்.
நம் நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய நலனில் அக்கறை செலுத்தவும், அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் பண்ணுகின்ற வகையிலும் 3 அடிப்படையான சட்டங்களாக இருக்கின்றன. அவை 1) இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் (1926),2) தொழில் வேலைவாய்ப்பு (நிலைச் சட்டங்கள்)சட்டம்(1946)-Industrial employment(Standing Orders), மற்றும் தொழில் தகராறு சட்டம் (1947). சட்டங்களை எளிமைப்படுத்துவது என்ற பெயரால் இந்த மூன்று சட்டங்களையும் முழுவதுமாக இல்லாமல் ஆக்கிவிட்டு அதற்குப்பதிலாக இந்த மூன்றிலுள்ள பல முக்கியமான
தொழிலாளர் நலன் சார்ந்த விதிகளை நீக்கிவிட்டு அல்லது நீர்த்துபோகச் செய்துவிட்டு, எஞ்சியுள்றவற்றையெல்லாம் ஒன்றிணைத்து, புதிய தொழிலுறவு சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்காக, அதனுடைய வரைவு மசோதாவை கடந்த ஏப்ரல் 27ல் Ministry of Labour and Empoyment of Government of India வெளியிட்டது.
பல ஆண்டுகளாக நம் நாட்டிலுள்ள முதலாளிகளும், அவர்களின் சார்பாக ஒரு பகுதி அறிவுஜீவிகளும் மற்றும் சில ஊடகங்களும் நம்நாட்டிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதுவரை ஆட்சியிலிருந்தவர்களும், அப்போதைக்கப்போது இந்த சட்டங்களை மாற்ற முயற்சி செய்து வந்தனர். ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அரசாங்கங்களின் இந்த முயற்சியை இதுவரை முறியடித்து வந்தன. ஆனால் வளர்ச்சி என்ற பெயரால் வாக்குகளைப் பெற்று தற்போது ஆட்சியிலிருக்கும் BJPயின் மோடி அரசு கார்பரேட் முதலாளிகளையும், அவர்களுடைய மூலதனத்தையும் கவரவேண்டும் என்ற நோக்கில், அவர்களுடைய இலாபவேட்டைக்குத் தடையாக இருக்கக்கூடிய தொழிலாளர் நலச் சட்டங்களையும், தொழில் உறவுச் சட்டங்களையும் மாற்றியமைத்து, நீர்த்துபோகச் செய்யக்கூடிய நடவடிக்கைக்கு மோடி அரசு தயாராகிவிட்டது. அதற்காக அது இரட்டை வேடம் போட்டு இரண்டு நாக்குகளில் பேச ஆரம்பித்திருக்கிறது. ஒரு புறம், 2014 அக்டோபர் மாதம் Shramev Jayate(Victory to Labour) ' உழைப்புக்கு வெற்றி' என்ற திட்டத்தை மோடியின் மத்திய அரசு ஆரம்பித்துள்ளது: மறுபுறம் தொழிலாளர் அரங்கில் தொழிற்சாலை சட்டம்(1946)Factory act, ஊழியர் மாநில காப்பீட்டு சட்டம் (Employees state insurance act 1948), குறைந்தபட்ச ஊதியச் சட்டம் (Minimum wage act 1948), ஊழியர் வருங்கால வைப்புநிதிச் சட்டம்(Employees' Provident act 1952), அப்ரெண்டீஸ் சட்டம் (Apprentices act 1961) மற்றும் தொழிலாளர் சட்டங்கள்(விதிவிலக்கு)சட்ட ம் (Labour laws (exemption)act 1986) ஆகிய முக்கியமான சட்டங்களை மாற்றியமைக்க/ திருத்தியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. Shrmev Jayate என்ற அந்த ' உழைப்புக்கு வெற்றி' திட்டத்தில் உள்ள 11 உட்பிரிவுகளில் ஒன்று மட்டுமே ஊழியர்களுக்கு ஆதரவான சமூக பாதுகாப்பு திட்டத்தைப் பற்றியும் ஏனைய அனைத்துமே ஊழியர்களுக்கு எதிரான அம்சங்களை மட்டுமே கொண்டுள்ளன. இவை அனைத்தின் உச்சகட்டமாக ஊழியர்களுக்கு ஆதரவான அடிப்படையான 1) இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் (1926),2) தொழில் வேலைவாய்ப்பு (நிலைச் சட்டங்கள்)சட்டம்(1946)-Ind ustrial employment(Standing Orders), மற்றும் 3, தொழில் தகராறு சட்டம் (1947) ஆகியவற்றை இல்லாமல் ஆக்கிவிட்டு அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவிருக்கு ம் சட்டத்திற்கான மசோதாதான் இந்த புதிய தொழிலுறவுச் மசோதாவாகும். சரி அப்படி என்னதான் ஆபத்து இதில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டாமா?
இந்திய தொழிற்சங்க சட்டம் 1926;
இதுவரை உள்ள சட்டத்தின்படி 7 தொழிலாளர்கள் இருந்தால் ஒரு சங்கத்தை ஆரம்பிக்கலாம். இனி புதிய சட்டப்படி அந்த நிறுவனத்தில் உள்ள 10% தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே ஒரு சங்கத்தை ஆரம்பிக்க முடியும்.
மத்திய அரசு இவற்றின் நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ளவிருப்பதால் மாநில அரசாங்கங்களுக்கு உள்ள அதிகாரம் பறிபோகிறது.
ஒரு சங்கத்தின் பதிவை இரத்து செய்வதற்கு ஏற்கனவே 3 காரணங்கள் தேவையாக இருந்தநிலை மாற்றப்பட்டு இனி 5 காரணங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் பதிவை இரத்து செய்யலாம்.
வெளியில்உள்ளவர்கள் 1/3 அல்லது 1/4 என்ற அளவில் நிர்வாகிகளாக இருக்கலாம் என்ற நிலை மாற்றப்பட்டு இனி இரண்டுபேர் மட்டுமே வெளியில் உள்ளவர்கள் சங்க நிர்வாகிகளாக இருக்கலாம்.
தொழில் வேலைவாய்ப்பு (நிலைச் சட்டங்கள்)சட்டம்(1946)-Ind ustrial employment(Standing Orders)
நிலைச் சட்டங்களில் ஏதாவது நிர்வாகம் மாறுதல் செய்ய விரும்பினால் இனி தொழிற்சங்கங்களின் பார்வைக்கும் ஆலோசனைக்கும் அனுப்பத் தேவையில்லை. விதிமீறல்களுக்கு தண்டனையின் தீவிரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்தகராறு சட்டம் (1947)
இனிஇவற்றின் வரம்பிற்குள் மருத்துவமனைகளும் கல்வி நிறுவனங்களும் கொண்டுவரப்படும்.
மத்தியஸ்த பேச்சுவார்த்தை நீதிமன்ற விசாரணை(court of inquiry) மற்றும் லேபர் கோர்ட் ஆகியவை எல்லாம் இரத்து செய்யப்படும்.
நீதிமன்ற வழக்கில் யாராவது ஒரு ஊழியர் நிவாரணம் பெற்றால், அது அவருக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்குப் பொருந்தாது. அவரவர் தனி வழக்குகள் போடவேண்டும்.
100 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் அந்த நிறுவனத்தில் இந்த தொழிற்தகராறு சட்டம் பொருந்தும் என்ற நிலை மாற்றப்பட்டு 300 ஊழியர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும்.(300 பேர்வரை உள்ள நிறுவனத்தில் அந்த முதலாளி நினைத்த மாத்திரத்தில் யாரையும் வேலையில் இருந்து நீக்கலாம். யாரும் கேள்வி கேட்கமுடியாது. நம் நாட்டில் தொழிலாளர்களில் 60%க்கு மேல் இது போன்ற தொழிற்சாலைகளில்தான் வேலைபார்க்கின்றனர் என்பது கவனத்திற்குரியது)
நாடு சுதந்திரம் அடைந்ததற்குப்பின் இந்தியத் தொழிலாளி வர்க்கம் இப்படிப்பட்ட ஆபத்தைச் சந்தித்ததில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் இந்தியத் தொழிலாளிகளுக்குப் பேராபத்தாய் முடியும். நமது நாட்டு மக்களின் அமைதியான வாழ்வுக்கு எதிராக பல்வேறு சாதி, மத, இன அடிப்படையில் மோதல்கள் தூண்டிவிடப்பட்டிருக்கும் நிலையில், கருத்துரிமைகள் நசுக்கப்படுகின்ற நிலையில் இவற்றை எதிர்கொள்ளவேண்டிய தொழிலாளி வர்க்கத்தின் முதுகெலும்பை முறிப்பதற்கும் வியூகம் வகுக்கப்பட்டுவிட்டது. இவற்றை எதிர்கொள்ளவேண்டியது நமது அடிப்படை கடமையாகும்.
நம் நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய நலனில் அக்கறை செலுத்தவும், அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் பண்ணுகின்ற வகையிலும் 3 அடிப்படையான சட்டங்களாக இருக்கின்றன. அவை 1) இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் (1926),2) தொழில் வேலைவாய்ப்பு (நிலைச் சட்டங்கள்)சட்டம்(1946)-Industrial employment(Standing Orders), மற்றும் தொழில் தகராறு சட்டம் (1947). சட்டங்களை எளிமைப்படுத்துவது என்ற பெயரால் இந்த மூன்று சட்டங்களையும் முழுவதுமாக இல்லாமல் ஆக்கிவிட்டு அதற்குப்பதிலாக இந்த மூன்றிலுள்ள பல முக்கியமான
தொழிலாளர் நலன் சார்ந்த விதிகளை நீக்கிவிட்டு அல்லது நீர்த்துபோகச் செய்துவிட்டு, எஞ்சியுள்றவற்றையெல்லாம் ஒன்றிணைத்து, புதிய தொழிலுறவு சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்காக, அதனுடைய வரைவு மசோதாவை கடந்த ஏப்ரல் 27ல் Ministry of Labour and Empoyment of Government of India வெளியிட்டது.
பல ஆண்டுகளாக நம் நாட்டிலுள்ள முதலாளிகளும், அவர்களின் சார்பாக ஒரு பகுதி அறிவுஜீவிகளும் மற்றும் சில ஊடகங்களும் நம்நாட்டிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதுவரை ஆட்சியிலிருந்தவர்களும், அப்போதைக்கப்போது இந்த சட்டங்களை மாற்ற முயற்சி செய்து வந்தனர். ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அரசாங்கங்களின் இந்த முயற்சியை இதுவரை முறியடித்து வந்தன. ஆனால் வளர்ச்சி என்ற பெயரால் வாக்குகளைப் பெற்று தற்போது ஆட்சியிலிருக்கும் BJPயின் மோடி அரசு கார்பரேட் முதலாளிகளையும், அவர்களுடைய மூலதனத்தையும் கவரவேண்டும் என்ற நோக்கில், அவர்களுடைய இலாபவேட்டைக்குத் தடையாக இருக்கக்கூடிய தொழிலாளர் நலச் சட்டங்களையும், தொழில் உறவுச் சட்டங்களையும் மாற்றியமைத்து, நீர்த்துபோகச் செய்யக்கூடிய நடவடிக்கைக்கு மோடி அரசு தயாராகிவிட்டது. அதற்காக அது இரட்டை வேடம் போட்டு இரண்டு நாக்குகளில் பேச ஆரம்பித்திருக்கிறது. ஒரு புறம், 2014 அக்டோபர் மாதம் Shramev Jayate(Victory to Labour) ' உழைப்புக்கு வெற்றி' என்ற திட்டத்தை மோடியின் மத்திய அரசு ஆரம்பித்துள்ளது: மறுபுறம் தொழிலாளர் அரங்கில் தொழிற்சாலை சட்டம்(1946)Factory act, ஊழியர் மாநில காப்பீட்டு சட்டம் (Employees state insurance act 1948), குறைந்தபட்ச ஊதியச் சட்டம் (Minimum wage act 1948), ஊழியர் வருங்கால வைப்புநிதிச் சட்டம்(Employees' Provident act 1952), அப்ரெண்டீஸ் சட்டம் (Apprentices act 1961) மற்றும் தொழிலாளர் சட்டங்கள்(விதிவிலக்கு)சட்ட
இந்திய தொழிற்சங்க சட்டம் 1926;
இதுவரை உள்ள சட்டத்தின்படி 7 தொழிலாளர்கள் இருந்தால் ஒரு சங்கத்தை ஆரம்பிக்கலாம். இனி புதிய சட்டப்படி அந்த நிறுவனத்தில் உள்ள 10% தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே ஒரு சங்கத்தை ஆரம்பிக்க முடியும்.
மத்திய அரசு இவற்றின் நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ளவிருப்பதால் மாநில அரசாங்கங்களுக்கு உள்ள அதிகாரம் பறிபோகிறது.
ஒரு சங்கத்தின் பதிவை இரத்து செய்வதற்கு ஏற்கனவே 3 காரணங்கள் தேவையாக இருந்தநிலை மாற்றப்பட்டு இனி 5 காரணங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் பதிவை இரத்து செய்யலாம்.
வெளியில்உள்ளவர்கள் 1/3 அல்லது 1/4 என்ற அளவில் நிர்வாகிகளாக இருக்கலாம் என்ற நிலை மாற்றப்பட்டு இனி இரண்டுபேர் மட்டுமே வெளியில் உள்ளவர்கள் சங்க நிர்வாகிகளாக இருக்கலாம்.
தொழில் வேலைவாய்ப்பு (நிலைச் சட்டங்கள்)சட்டம்(1946)-Ind
நிலைச் சட்டங்களில் ஏதாவது நிர்வாகம் மாறுதல் செய்ய விரும்பினால் இனி தொழிற்சங்கங்களின் பார்வைக்கும் ஆலோசனைக்கும் அனுப்பத் தேவையில்லை. விதிமீறல்களுக்கு தண்டனையின் தீவிரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்தகராறு சட்டம் (1947)
இனிஇவற்றின் வரம்பிற்குள் மருத்துவமனைகளும் கல்வி நிறுவனங்களும் கொண்டுவரப்படும்.
மத்தியஸ்த பேச்சுவார்த்தை நீதிமன்ற விசாரணை(court of inquiry) மற்றும் லேபர் கோர்ட் ஆகியவை எல்லாம் இரத்து செய்யப்படும்.
நீதிமன்ற வழக்கில் யாராவது ஒரு ஊழியர் நிவாரணம் பெற்றால், அது அவருக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்குப் பொருந்தாது. அவரவர் தனி வழக்குகள் போடவேண்டும்.
100 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் அந்த நிறுவனத்தில் இந்த தொழிற்தகராறு சட்டம் பொருந்தும் என்ற நிலை மாற்றப்பட்டு 300 ஊழியர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும்.(300 பேர்வரை உள்ள நிறுவனத்தில் அந்த முதலாளி நினைத்த மாத்திரத்தில் யாரையும் வேலையில் இருந்து நீக்கலாம். யாரும் கேள்வி கேட்கமுடியாது. நம் நாட்டில் தொழிலாளர்களில் 60%க்கு மேல் இது போன்ற தொழிற்சாலைகளில்தான் வேலைபார்க்கின்றனர் என்பது கவனத்திற்குரியது)
நாடு சுதந்திரம் அடைந்ததற்குப்பின் இந்தியத் தொழிலாளி வர்க்கம் இப்படிப்பட்ட ஆபத்தைச் சந்தித்ததில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் இந்தியத் தொழிலாளிகளுக்குப் பேராபத்தாய் முடியும். நமது நாட்டு மக்களின் அமைதியான வாழ்வுக்கு எதிராக பல்வேறு சாதி, மத, இன அடிப்படையில் மோதல்கள் தூண்டிவிடப்பட்டிருக்கும் நிலையில், கருத்துரிமைகள் நசுக்கப்படுகின்ற நிலையில் இவற்றை எதிர்கொள்ளவேண்டிய தொழிலாளி வர்க்கத்தின் முதுகெலும்பை முறிப்பதற்கும் வியூகம் வகுக்கப்பட்டுவிட்டது. இவற்றை எதிர்கொள்ளவேண்டியது நமது அடிப்படை கடமையாகும்.
Monday, 12 October 2015
எவ்வளவு அற்புதமான, நேர்த்தியான,
உண்மையான வார்த்தைகள்! அவசியம் படியுங்கள்!
மாற்றம் நிகழும்-அது மிக இயல்பாக… மழை பொழிவதுபோல!
அவர் உலக நாயகன் என்பதில் சந்தேகமில்லை. பிறந்த நாட்டில் இருக்கும்போது, அவர் மூடின முத்து - அதாவது தேர்தல் பிரச்சார மேடையில் நிற்காத நேரத்தில். மூடிய அறைக்குள் அமர்ந்து ‘மன் கீ பாத்’ சொற்பொழிவை ஒலிப்பதிவு செய்யாத நேரத்தில்… மக்கள் மன்றத்தில் என்னதான் அமளி நடக்கட்டுமே - முக்கியத் துறையின் அமைச்சர் பற்றி சர்ச்சை எழட்டுமே, மாநில பாஜக அரசுகளின் ஊழல்களைப் பற்றி புகார்கள் வெடிக்கட்டுமே - ஊஹும் அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல கண்ணுக்குத் தெரியாமல் போவார். அவரது அமைச்சரவையில் உள்ள சில பல உருப்படிகள் சகட்டுமேனிக்குச் சிறுபான்மையினரை அவமதிக்கும் வகையில் அவதூறு பேசி உளறட்டுமே - அவர் தாமரை மேல் ஒட்டாத நீர் - பத்மபத்ர ந வாம்பஸா… பல்கலைக்கழக உயர் நியமனங்கள், புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் அமர்த்தப்பட்ட தகுதியற்ற தலைவர் பற்றிய விவகாரம், அதை எதிர்க்கும் மாணவர்களின் போராட்டம்... நாடு முழுவதும் அறிஞர்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் - எதுவும் அவரது செவியில் விழாது. அவர் எட்டாத உயரத்தில் இருப்பவர். தந்தக் கோபுரத்தில். அங்கிருந்து அவரது பார்வைக்குக் காலடி மண் தெரிய வாய்ப்பில்லை. அவரது பார்வையில் படுவது அகன்று விரிந்த கடல் பரப்பு. பாற்கடல். அதில் மையமாக அவர் - சயனித்திருக்கும் "மஹா விஷ்ணு" எத்தகைய தெம்பூட்டும் அது!
மோடி மந்திரம்
அயல்நாட்டுப் பயணங்கள் சிலிர்ப்பூட்டும் விஷயங்கள். பாதுகாப்பு உணர்வைத் தருபவை. நியூயார்க் பார்த்திருக் கிறீர்களா? மாடிசன் ஸ்க்வேர் கார்டன்? அடேயப்பா, அங்கே வந்திருந்த மாபெரும் கூட்டத்தில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் லட்சக்கணக்கில் கூடி ‘மோடி… மோடி!” என்று கைத்தட்டி நிறுத்தாமல் கோஷமிட்டபோது கண்களில் நீர் நிறைந்தது. பெருமிதத்தில் மார்பு இன்னும் விரிந்து நிமிர்ந்து நின்றது. அதையும் மிஞ்சப் பார்த்த ஷாங்காய் நகரக் கூட்டத்துக்கு சீனாவின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் அங்கு வாழும் இந்தியர்கள் வந்தார்களே? இதற்கு முன் யாருக்கு அத்தகைய வரவேற்பு கிடைத்திருக்கும்? ‘‘கனவுகூடக் காண முடியாத பின்புலத்திலிருந்து வந்தவன் நான், உங்கள் முன் நிற்கிறேன்’’ என்றபோது கூட்டம் எப்படி ஆர்ப்பரித்தது! ஓ, மறந்துவிட்டது. ஆஸ்திரேலியப் பயணத்தில், சிட்னி அல்ஃபோன்ஸ் அரீனாவில் எப்படிப்பட்ட அரங்க ஏற்பாடு! மத்தளமும் சங்கும் முழங்க வரவேற்பு. கடல்போலக் கண்முன் விரிந்த ஜனத்திரள். ஆஹா, அந்த ஆனந்த உணர்வை அனுபவத்தில்தான் அறிய முடியும். இப்போது வேறு திசையிலும் திணறடிக்கும் வரவேற்பு. துபாயின் பிரபல கிரிக்கெட் மைதானத்தில் 50,000 பேர் கூடியிருந்தார்கள். ‘மோடி… மோடி!’ என்று மந்திரம்போல் இசைத்தார்கள். இந்தியில் பேசப்பேச ஒவ்வொரு வரிக்கும் ஆர்ப்பரித்தார்கள்.
மோடியின் அபய ஹஸ்தம்
வெளிநாடுகளில், அங்கு வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பேசுவது வெகு சுலபம். சவுகரியமாக வாழும் என்.ஆர்.ஐ. கூட்டத்தின் உற்சாக ஆர்ப்பரிப்பு போதையைத் தரும். தடுமாற வைக்கும். அவருக்காக வந்த கூட்டமல்லவா? அலங்கார வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. ‘‘வள்ளல் பெருமக்களான உங்களது உபயத்தால்தான் இந்திய நாட்டின் பொருளாதாரம் தடம்புரளாமல் இருக்கிறது’’ என்ற வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை.
‘‘இத்தனை ஆண்டுகள் இந்தியா இருண்டிருந்தது. ஊழல் கறை படிந்திருந்தது. நீங்கள் அதை நினைத்து வெட்கப்பட்டீர்கள். இனி நீங்கள் தலை நிமிரலாம். உங்கள் பிறந்த மண்ணின் வாசல் திறந்திருக்கிறது. உங்கள் வளங்களை அங்கு கொட்டுங்கள். பயப்படாமல் வர்த்தகம் செய்யுங்கள்…’’
மோடி என்ற மகத்தான தனி மனிதரின் அபய ஹஸ்தம் உங்களைக் காக்கும் என்கிற சேதி வார்த்தைகளால் சொல்லப்படாமல் அவர்களைப் பரவசப்படுத்தும். அவர்களால் புரிந்துகொள்ள முடிந்த ஹிந்துஸ்தானி மொழி. இந்திய மொழி செவியில் விழும்போது நாடி நரம்பெல்லாம் உசுப்பிவிடுவதுபோல் இருக்கிறது. நல்ல வேளை புரியாத மொழி பேசும் அறிவுஜீவி இல்லை அவர். அறிவுஜீவிகளுடன், கலைஞர்களுடன் அவருக்குத் தொடர்பு இல்லை. வார்த்தைகளால் பின்னல் பின்னித் தோரணம் கட்டுகிறார். எத்தகைய கனவுகளை விரிக்கிறார்? அவருடைய உடையைப் பார்த்தீர்களோ? எத்தனை நேர்த்தி! ஒவ்வொரு நாட்டுக் கூட்டத்துக்கும் அதற்கு ஏற்ற உடை. அதற்குப் பொருத்தமாக அங்கவஸ்திரம். இத்தனை ஸ்மார்ட்டாக எத்தனை இந்தியப் பிரதமர்களைப் பார்த்திருக்கிறீர்கள்?
என் பலம் தெரியாது
அவருக்குத் தெரியும், இந்த லாகிரி சொற்ப நேரம்தான் நிலைக்கும். இதுவரை நீங்கள் மேற்கொண்ட பயணங்களால் நாட்டுக்கு என்ன லாபம் கிடைத்தது என்று பொருளாதார நிபுணர்கள் கேட்பார்கள். கேட்கட்டும்; விவாதத்துக்கு அவர் தயாரில்லை. அவருக்குப் பேசித்தான் பழக்கம். கேட்டுப் பழக்கமில்லை. கேட்க வேண்டிய அவசியமில்லை. எதிர்பாராத அளவு தேசம் தழுவிய வெற்றியைக் கட்சிக்குத் தனது பேச்சுத் திறமையால், பிரச்சாரத் திறமையால் கிடைக்கவைத்து ஆட்சியில் அமர்த்தியாகிவிட்டது. இன்னும் நான்கு ஆண்டுகள் அவரை அசைக்க முடியாது. பேசுபவர் பேசட்டும். வேலையற்றவர்கள். தோற்றுப்போனவர்கள். பொது மேடையில் அவர்களை நார் நாராகக் கிழித்துப் போடுவது சிரமமில்லை. மக்கள் அவரது ஒவ்வொரு வார்த்தையையும் நம்புவார்கள். வாக்குகளை அப்படித்தான் அள்ள முடியும். நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் அல்ல.
அந்தப் பொடியன் என்ன சொன்னான்? நாடாளு மன்றத்துக்கு வந்து கேள்விகளைச் சந்திக்க மோடிக்குத் தைரியமில்லை என்றான். என் பலம் அவனுக்குத் தெரியாது. பல திறமையான இளம் தலைவர்கள் கொண்ட பழமையான கட்சி அவனை நம்பித் தொங்கிக் கொண்டிருக்கிறது. நமது அதிர்ஷ்டம் அது. வெற்றுக் காற்று. என் சகாக்களே அவனை ஊதி வெளியேற்றுவார்கள்.
அது சரி... விமானத்திலிருந்து தரையிறங்கிவிட்டீர்களா? இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்? எப்படி நிறைவேற்றப்போகிறீர்கள்?
நீங்கள் மேடையில் பேசும் பேச்சுக்கள், மன் கீ பாத் பிரசங்கங்கள் யாவும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தொடுவதில்லையே? ஏன்? வானத்தை வில்லாய் வளைப் பேன் என்கிறீர்கள். எப்படி? என்னதான் உங்கள் திட்டம்? அல்லது எண்ணம்? யாருக்கும் தெரியாது. வருஷத்துக்கு ஒரு முறை நீங்கள் செங்கோட்டையில் நின்று முழங்கும் சுதந்திர தினப் பேச்சுக்குக் காத்திருக்க வேண்டுமா?
பீதியளிக்கும் அலட்சியம்
உங்கள் உடல்மொழி தெரிவிக்கும் சமிக்ஞை ஆபத்தா னது. நார்சிஸ (சுயமோகம்) எல்லையைத் தொடுவது. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அரசு இல்லை என்கிற மிதப்பு , உங்கள் மவுனம் வெளிப்படுத்தும் அலட்சியம் பீதியளிக்கிறது. இந்தப் பயம் என்னுடைய பிரத்தியேக உணர்வு இல்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல், அறிவுக்கூடங்களில் நுழைந்திருக்கும் அடிப்படைவாதம், அமைச்சர்களின் தன்னிச்சையான பிடிவாதங்கள், எதிர்ப்பை அமுக்கும் மூர்க்கம், எல்லாவற்றையும் அங்கீகரிக்கும் உங்கள் மவுனம் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. மக்கள் கவனிப்பார்கள். இன்றில்லாவிட்டால் நாளை. அவர்கள் வெறும் வாக்கு எண்கள் அல்ல. உயிர்த் துடிப்புள்ள, எதிர்பார்ப்புகள் நிறைந்த ஜீவன்கள். அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை உலக வரலாறு சொல்லும்.
ஜான் ஸ்டீன்பெக் எழுதிய ‘கிரேப்ஸ் ஆஃப் ராத்’ என்ற நாவலில் கேஸி என்ற ஒரு கதாபாத்திரம் ஏமாற்றமும் விரக்தியும் மிகுந்த காலகட்டத்தில் சொல்லும், ‘அது நிகழும். மக்கள் ஒன்றாகச் சிந்தித்து எழும் காலம் வரும், மாற்றம் விளைவிக்க. அது மிக இயல்பாக நிகழும். மழை பொழிவதுபோல!’
நான்கு ஆண்டுகளில் அது நிகழலாம் - மிக இயல்பாக - மழை பொழிவதுபோல.
- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.
சாகித்ய அகாடமி நிர்வாக குழு 23–ந்தேதி அவசரமாக கூடுகிறது
மேலும் 6 எழுத்தாளர்கள் விருதை ஒப்படைக்க முடிவு:
புதுடெல்லி
15 எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளதால், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க சாகித்ய அகாடமி நிர்வாகிகள் குழுவின் அவசர கூட்டம் 23–ந்தேதி நடக்கிறது. மேலும் 6 எழுத்தாளர்கள் விருதுகளை ஒப்படைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சாகித்ய அகாடமி விருதுகள்
கர்நாடக மாநிலத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற பகுத்தறிவு எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சமீபத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது எழுத்தாளர்கள் மத்தியிலும், சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். நாட்டில் மத ரீதியான மோதல்கள் அதிகரித்து இருப்பதாலும், சகிப்புத்தன்மை குறைந்து வருவதாலும், கல்புர்கி படுகொலையில் சாகித்ய அகாடமி மவுனமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விருதுகளை ஒப்படைப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
15 எழுத்தாளர்கள்
இதுவரை 15 எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர். நேற்று மேலும் 6 எழுத்தாளர்கள் விருதுகளை ஒப்படைக்க முடிவு செய்தனர். காஷ்மீர் எழுத்தாளர் குலாம்நபி காயல், கன்னட எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீநாத், ராஜேஷ் ஜோஷி, இந்தி எழுத்தாளர் மங்களேஷ் டப்ரால், வார்யம் சாந்து, ஜி.என்.ரங்கநாதராவ் ஆகியோர் இந்த முடிவை எடுத்தனர்.
இதில் மங்களேஷ் டப்ரால், ராஜேஷ் ஜோஷி, ஸ்ரீநாத் ஆகியோர் நேற்றே தங்கள் விருதுகளை ஒப்படைத்துவிட்டனர். மற்றவர்கள் தங்கள் முடிவை சாகித்ய அகாடமிக்கு தெரிவித்துள்ளனர். மும்பையை சேர்ந்த உருது எழுத்தாளர் ரஹ்மான் அப்பாஸ், குஜராத்தை சேர்ந்த பிரபல கவிஞர் அனில்ஜோஷி ஆகியோரும் நேற்று தங்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர்.
பேனா–துப்பாக்கி குண்டு
குலாம்நபி காயல் கூறும்போது, ‘‘நாட்டில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பற்றவர்களாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் உணர்கிறார்கள். பேனா இருக்க வேண்டிய இடத்தில், இப்போது துப்பாக்கி குண்டுகள் பாய்கிறது’’ என்றார்.
எழுத்தாளர்கள் டப்ரால், ஜோஷி ஆகியோர் கூறும்போது, ‘‘கல்புர்கி படுகொலைக்கு சாகித்ய அகாடமி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நாட்டில் இப்போதுள்ள சூழ்நிலைக்கு கண்டனம் தெரிவிப்பது அகாடமியின் கடமை’’ என்றனர். ஜோஷி உள்பட சிலர் விருதுடன், தங்கள் பரிசு தொகையையும் திருப்பி அனுப்பியதாக கூறியுள்ளனர்.
அதோடு அகாடமியின் நிர்வாகிகள் குழு இந்த பரிசுத்தொகையை என்ன செய்வது? என்பது குறித்து இப்போதே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
23–ந்தேதி அவசர கூட்டம்
எழுத்தாளர்கள் தொடர்ந்து தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருவதால் சாகித்ய அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் சாகித்ய அகாடமியின் நிர்வாகிகள் குழுவின் அவசர கூட்டம் 23–ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துவருவதால், இந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த அவசர கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டாலும், அகாடமியின் பெரும்பாலான நிர்வாகிகள் தற்போது டெல்லிக்கு வெளியே இருப்பதால் 23–ந்தேதி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அகாடமியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
Sunday, 11 October 2015
மறைந்தார் மனோரமா!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 1943ம் ஆண்டு மே, 23 ம் தேதி பிறந்தவர் கோபி சாந்தா. சினிமாவுக்காக மனோரமா என்று பெயர் மாற்றப்பட்டார். ராஜமன்னார்குடியில் 6ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது, 12 வயதில் நாடகத்தில் நடிக்கத் துவங்கினார். பின்னர், 1960ல் 'களத்துார் கண்ணம்மா' என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் கால்பதித்தார். தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து, 1000 படங்களுக்கும் மேல் நடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர். தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடகத்திலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி மற்றும் குணச்சித்திரம் உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி, 300க்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியிருக்கிறார். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். 'பத்ம ஸ்ரீ' மற்றும் தமிழக அரசின் 'கலைமாமணி' மற்றும் தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். சினிமா ரசிகர்களால் 'ஆச்சி' என்று அழைக்கப்பட்டவர். கடைசியாக, 'சிங்கம் 2' படத்தில் நடித்திருந்தார். விரைவில் தயாரிக்கப்படும் 'சிங்கம் 3' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
Subscribe to:
Posts (Atom)
SITE MAINTAINED BY
S . சிவசிதம்பரம்