scroll

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - பட்டுக்கோட்டை வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஆடுகளைத்தான்கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல;ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின். -அம்பேத்கர்

Tuesday, 29 October 2013

சனி, மே 07, 2011


தமிழக கம்யூனிஸ்டுகள் மட்டும் என்ன உத்தமபுத்திரர்களா?



இன்று யாரிடம் போய் தேர்தல் பற்றி பேசினாலும் ஒருவித சலிப்பைக் காணலாம். எங்கங்க எல்லாம் திருட்டுபயல்களா இருக்காங்க, இந்த நிலைமைல யாருக்கு ஓட்டுபோட்டு என்னத்த பண்றதுன்னு.

நிஜமாவே எல்லாருமே திருடர்கள்தானா? ஊழல்வாதிகல்தானா? என்று கட்சி வாரியாக யோசித்தபோது, தூய்மையானவர்கள் என்று எந்த கட்சியிலும் ஒரு பெயர்கூட நினைவிற்கு வரவில்லை. சரி ரொம்ப வருடங்களா முன்னேற்றமே இல்லாம இருக்கிற கம்யுனிஸ்ட்டுகள் எப்படி இருக்காங்கன்னு பார்த்தால் நிலைமை அவ்வளவு மோசம் இல்லை என்றே தோன்றுகிறது, ஒரு நம்பிக்கை கீற்று தெரிகிறது.

ஆம், என்னுடைய நினைவிற்கு 3 பெயர்கள் வருகிறது.

நல்லகண்ணு
பாலபாரதி நன்மாறன் ஏழ்மையான நிலையில்கூட கட்சி தனக்காக வசூல் செய்து குடுத்த 1 கோடி ரூபாய் பணத்தை கட்சிக்கே திருப்பி குடுத்த பெருந்தன்மை தோழர் நல்லகண்ணுவிடம் இருந்தது. MLA வாக இருந்தும் அரசு பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை வாழத்தெரியாத,குடிசை வீட்டில் வாழ்ந்த நேர்மை நன்மாரனிடம் இருந்தது. போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து சொத்துகணக்கை கூட்டி காட்டும் அமைச்சர்கள் மற்றும் MLA க்கள் மத்தியில் போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் சொத்து கணக்கு குறைந்த நிலையில் பாலபாரதி இருக்கிறார்.

தமிழக கம்யூனிஸ்டுகள் அனைவருமே நல்லவர்களா? எனக்கு தெரியாது. ஆனால் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் உத்தமபுத்திரர்களாகவே இருக்கிறார்கள்.

ஊழலை இந்த அளவு எதிர்க்கும் மக்கள் நியாயமாக கம்யூனிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி இருக்க வேண்டும். ஆனால் பலமுறை தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பவர்களை விட்டுவிட்டு, புதிதாக ஒருவர் (தேவலோகத்திலிருந்து) பிறப்பார் என்று எதிர்பார்க்கும் இந்த மக்களை என்ன சொல்ல?
 

No comments:

Post a Comment

SITE MAINTAINED BY

S . சிவசிதம்பரம்