மக்கள் நிலை அறியாதவர்கள்!
நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான யோசனைகளைக்
கூறுவதற்காக மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட விஜய் கேல்கர் கமிட்டி
அளித்துள்ள பரிந்துரைகளில் முதன்மையானவை என்று சொல்லத்தக்கவை ஆறு. அவை:
1. டீசல் விலையைக் குறைத்து விற்பனை செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க வேண்டும். முதல் கட்டமாக 2013 மார்ச் மாதத்திற்குள்ளாக டீசலுக்கு தற்போது வழங்கப்படும் மானியத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும். மீதியை 2014 மார்ச் மாதத்துக்குள் முற்றிலுமாக இல்லாமல் செய்துவிட வேண்டும். நிகழாண்டில் டீசல் விலையைக் குறைந்தது லிட்டருக்கு ரூ.4 உயர்த்த வேண்டும்.
2. மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்த வேண்டும். இதற்கு, தற்போது ஒதுக்கப்படும் மானியத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துவிட வேண்டும்.
3. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், சமையல் எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து, முற்றிலும் இல்லாமல் செய்துவிட வேண்டும். முதல்கட்டமாக 2012-13 நிதியாண்டில் 25% மானியத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
4. தற்போது உணவு மானியமாக ரூ.85,000 கோடி செலவாகிறது. நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கு ஆதார விலை அறிவிக்கும் அதே வேளையில், நியாயவிலை கடைகளுக்காக மத்திய அரசு வழங்கும் விலையையும் உயர்த்த வேண்டும். அதேபோன்று, வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களுக்கான மானியத்தை ரத்து செய்து, சந்தை விலையில் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.
5. உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாக குறைத்து, யூரியா, நைட்ரேட் பாஸ்பேட் உரங்களை அதன் சந்தை மதிப்புக்கேற்ப அரசே ஆண்டுதோறும் விலை நிர்ணயம் செய்யலாம்.
6. மானியத் தொகையைப் பொருளாக வழங்காமல், பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டால், அமலாக்கக் குறைபாடுகள் இல்லாமல் செய்துவிட முடியும்.
இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தினால் நிதிப் பற்றாக்குறை அளவைப் பெருமளவு குறைத்துவிட முடியும் என்று பட்டியலிடுகிறது கேல்கர் கமிட்டி. இதுதவிர, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பணம் பெறும் வழிமுறை, பயன்படாத, பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை விற்பனை செய்து பணம் பெருக்கும் வழிமுறை என்று பலவிதமான யோசனைகளும் இக்கமிட்டியின் பரிந்துரைகளில் அடங்கும்.
டீசல் விலையை ஏற்கெனவே ரூ.5 உயர்த்திவிட்டார்கள். சமையல் எரிவாயு உருளை ஆண்டுக்கு 6 மட்டுமே மானிய விலையில் கிடைக்கும் என்று மானியத்தின் அளவை ஏறக்குறைய 50% குறைத்துவிட்டார்கள். ஏழைகளுக்கான மானியத் தொகையைப் பணமாக நேரடியாக வங்கியில் செலுத்தும் நடைமுறையை சில நகரங்களில் சோதித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தது நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்துவதும், உரமானியத்தைக் குறைப்பதும், மண்ணெண்ணெய் விலையை உயர்த்துவதும்தான் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும்.
டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு, உரம், உணவுப்பொருள் எல்லாமும் சந்தை விலையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் கேல்கர் கமிட்டி சொல்லும் பரிந்துரையின் அடிப்படை நோக்கம். இதில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளுக்கு மட்டும் உணவுப் பொருள் மானியத்தைத் தொடர்ந்து வழங்கப் பரிந்துரைக்கும் கேல்கர் கமிட்டி, இந்த மானியத் தொகையும்கூட ரூ.1,000-க்கு அதிகமாக இருக்குமென்றால் அந்தக் குடும்பத்துக்கு நேரடியாகப் பணமாகக் கொடுத்துவிடுங்கள் என்கின்றது.
அதாவது அப்படி பணமாகக் கொடுத்துவிட்டால், அந்த ஏழை நேரடியாகப் பொதுச்சந்தையில், சந்தை விலையில் உணவுப் பொருள்களை வாங்கிக்கொள்வார் என்பது அரசின் கருத்து. மற்ற எல்லா பரிந்துரைகளைக் காட்டிலும் இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே நடைமுறை உண்மை.
உணவுப் பொருள்களுக்கான மானியத்தை நேரடியாகக் கொடுத்தால் குடும்ப அட்டையில் குறிப்பிட்டுள்ள குடும்பத் தலைவருக்குத்தான் தர முடியும். குடும்பத் தலைவர் கணக்கில் மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்திவிடும் நடைமுறை வருகின்றது என்று வைத்துக்கொள்வோமேயானால், தமிழ்நாட்டைப் பொருத்தவரை என்ன நடக்கும்? முதலில் நியாயவிலைக் கடைகளுக்கு அவசியமே இருக்காது. இரண்டாவதாக, இந்த ஆயிரம் ரூபாய் மானியம், யாருடைய லஞ்சத்துக்கும் அவசியமில்லாமல் நேரடியாகக் கிடைத்தாலும்கூட, குடும்பத் தலைவருக்கு மட்டும்தான் கிடைக்கும். அவர்களில் பெரும்பாலோர் அந்த ரொக்கப் பணத்தை மதுக்கடைக்குத்தான் செலவழிப்பார்கள்.
அதாவது, தற்போது வீட்டுத் தலைவர் குடிகாரராக, குடும்பச் செலவுக்குப் பணம் கொடுக்காதவராக இருந்தாலும், தமிழக அரசு தரும் 20 கிலோ இலவச அரிசியால் உயிர்வாழ முடியும். அதைவிடுத்து, இந்த மானியத் தொகையை நேரடியாகக் குடும்பத் தலைவனிடம் கொடுத்தால், குடும்பமே பட்டினிக்கு ஆளாகும். மானியம் மதுவாக மாறும் அவலம் அரங்கேறும்.
போலி குடும்ப அட்டைகள், போலி முதியோர் உதவித்தொகைபோல, இந்த மானியத்துக்குப் போலி "ஆதார்' அட்டைகள் வராது என்பது என்ன நிச்சயம்? அரசு நிர்வாகம் என்பது தொழில்துறை நிறுவனங்களை நிர்வாகம் செய்வதுபோல அல்ல. நிர்வாகவியலிலும் நிதிநிர்வாகமும் படித்தவர்கள் தொழில் நிறுவனங்களைத் திறம்பட நடத்தலாமே தவிர, நாட்டு நிர்வாகத்தை நடத்த முற்படும்போது இதுபோன்ற "ஏட்டுச்சுரைக்காய்' முடிவுகள் மேற்கொள்ளப்படுவதில் வியப்பொன்றுமில்லை. மேலை நாடுகளில் தோல்வியடைந்துவிட்ட சந்தைப் பொருளாதாரத்தை இந்தியாவில் நிறைவேற்றத் துடிக்கும் ஆட்சியாளர்களின் அறியாமைக்கு எடுத்துக்காட்டுதான் கேல்கர் கமிட்டியின் பரிந்துரைகள்.
இந்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக அளிக்கும் மக்களுக்கான மானியத்தின் அளவு 3.25 லட்சம் கோடி ரூபாய்.
ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஆகியவற்றில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு (1.76+1.86) ரூ. 3.62 லட்சம் கோடி! முதலாவது மக்கள் மானியம். இரண்டாவது ஆட்சியாளர்களின் "மானியம்'. முதலில் ஆட்சியாளர்களின் "மானியத்தை' ஒழித்துவிட்டு, சராசரி குடிமகனின் மானியத்தை ஒழிக்க முற்பட வேண்டுமென்று பரிந்துரைக்க ஒரு கமிட்டியை யார் அமைப்பது?
nandri: dinamani thalaiyangam.

No comments:
Post a Comment