scroll

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - பட்டுக்கோட்டை வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஆடுகளைத்தான்கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல;ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின். -அம்பேத்கர்

Sunday, 27 May 2012

அகில இந்திய எதிர்ப்பு நாள் 31-05-2012



     நியாயமற்ற மிகவும் மோசமான பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டனத்தை தெரிவிக்கும் முகமாக வருகிற 31-05-2012  அன்று கண்டன  நாள் போராட்டம் நடத்திடுமாறு அகில இந்திய அளவில் அறைகூவல் விடப்பட்டுள்ளது.
   அதன்படி முழு அடைப்பு உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் போராட்டங்களில் ஈடுபடுமாறு மாநிலச் செயலர் தோழர் தா.பா அறிவித்துள்ளார். எனவே, அனைத்து மட்டங்களிலும் தீவிரமாக இப் போராட்டத்தை நடத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்,
ஆர். திருஞானம்,
மாவட்டச் செயலர்.

Sunday, 6 May 2012

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 
பட்டுக்கோட்டை கிளையின் 
புதிய வெப்சைட் திறப்பு விழா!

Saturday, 5 May 2012

புதிய வலைத்தளம் ( வெப்சைட் ) திறப்பு விழா.

     நமது  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை  கிளையின் புதிய வலைதளத்தினை   இன்று மாலை 
நடைபெறுகின்ற தியாகிகள் தினப் பொதுக்கூட்டத்தில்   தோழர்.தா.பாண்டியன் அவர்கள் முறைப்படி திறந்து 
வைக்கிறார்கள் என்பதை உங்களுக்கு   மகிழ்வோடு
தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன், 
R. திருஞானம், தஞ்சை மாவட்டச் செயலர். 

அரங்க.  சின்னப்பா        சி.பக்கிரிசாமி,              P.R. நாதன்,             N. காளிதாஸ். 
மாவட்டக்குழு தோழர்கள்.
 
                   அ . மார்க்ஸ்,                                                     புலவர். மு. முத்துவேல ஒன்றியச் செயலர்.                                                          நகரச் செயலர். பட்டுக்கோட்டை.  

அனைவரும் வருக!

தியாகிகள் தின சிறப்புக் கூட்டம்.

பட்டுக்கோட்டையில் தியாகிகள் தின சிறப்புக் கூட்டம்.

மாநிலச் செயலர். தோழர்.  தா. பா பேசுகிறார்.

Friday, 4 May 2012

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 
பொன் விழா சிறப்பு மாநாடு.

அருமைத் தோழர்களே!  

நமது இலக்கியப்  பேராசான் தோழர். ஜீவா அவர்களால்      1961 மே 29 அன்று துவக்கி வைக்கப்பட்ட 
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 
50 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.
வருகிற  மே  12,  13  சனி, ஞாயிறு  ஆகிய இரு நாட்களும்  பொன்விழா சிறப்பு மாநில மாநாடாக கோவையில் 
நடைபெறவிருக்கிறது. 
        மாநாட்டில் மன்றத்தின் முதல் மாநிலச் செயலர் 
தோழர் தா. பாண்டியன் அவர்களும், அருமைத் தலைவர், மூத்த  தோழர். நல்லக்கண்ணு அவர்களும் பங்கேற்கிறார்கள்.  

அது மட்டுமல்ல, கவிஞர்களும், கலைஞர்களும் ஆய்வறிஞர்களும்  பங்கேற்கிறார்கள்.            
மிகச் சிறப்பாக கலை நிகழ்ச்சிகள், பாடல்கள்,  நாடகங்கள் நடைபெறவிருக்கிறது.   நமது மன்றத் தோழர்கள் தவறாது பங்கேற்றுச் 
சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் 
கொள்கிறேன்.

தோழமையுடன், 
மூ. முத்துவேல்.
செயலர், 
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
பட்டுக்கோட்டை கிளை.

Tuesday, 1 May 2012


வீர வணக்கம்!
    
 நமக்காக ஒரு கூட்டம் உழைத்திருக்கிறது, உயிரை இழந்திருக்கிறது, சொத்தை, சுகத்தை, சுற்றத்தை என்று இழந்தது இன்னும் எவ்வளவோ!   அதனால் கிடைத்த பலன்களும்  அளவற்றது.   ஆனாலும் அப் பலன்களை இன்று வரை எட்டாதவர்களும் உண்டு.  

சரி!  நாம் என்ன செய்ய?
     எவ்வளவோ செய்யலாம்!   உழைக்கும் வர்க்கம் ஒன்று பட்டால் உலகே நமதாகும் என்பதை நாம் உணர்ந்த்தவர்களாய் இருந்தால்,
      அந்த ஒற்றுமையைக் காக்க உழைப்போம். 
    ஒற்றுமைக்கு ஊறு  விளைப்போரை அடையாளம் காண்போம், அவர்களை ஒற்றுமைக் கண்ணியில் இணைப்போம்!  இயலவில்லையெனில் அவர்களை அம்பலப்படுத்துவோம்! சரிதானே!

சரி! அவைகளை அடையாளம் காண்பது எப்படி?

  ஒன்று பட வேண்டியவர்கள் ஏன் பிரிந்து நிற்கிறார்கள்?    
      ஒற்றுமை கோஷம் எழுப்புபவர்கள் ஏன் ரெண்டு பட எண்ணுகிறார்கள்?     
      இழக்கப் போவது அடிமைச் சங்கிலிகளைத்தான் என்று கூறிக் கொண்டே அடிப்படை உரிமைகளையே இழக்கத் துணிகின்றார்களே?  
     ஏன்? எதற்காக இப்படி? என்ற கேள்விகளை நாம் எழுப்பத் துவங்கி விட்டால் அவர்களின் சுய ரூபம் தெரிய ஆரம்பிக்கும்? அப்பொழுது அவர்களை, அவர்களின்   இயக்கத்தை நம்மால்  சரியாக  அடையாளம் காண முடியும்.

        சரி, இதையெல்லாம் கேட்க, கவனிக்க நமக்கு எங்கே நேரம் இருக்கிறது  என்று எண்ணி வாளாவிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.

  இந்த மே தினத்திலிருந்தாவது,  இந்த வகையில் எண்ணிச் செயல்பட்டால், மே தினத் தியாகிகளை எண்ணிப் பார்த்த புண்ணியமாவது நம்மைச் சேரும்.  அந்தத் தியாகம், அவர்களின் ரத்தம் சிந்திய வேதனை நமது சந்ததிக்கு வரவேண்டாமே!

    மே தினத் தியாகிகளே! உங்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை உரித்தாக்குகின்றோம். உங்கள் தியாகம் வீணாகாது. நீங்கள்  பெற்றுத் தந்த உரிமைகளை, சலுகைகளை  கண்ணின் மணிபோல் காத்திட சபதமேற்கிறோம்!

வாழ்த்துகளுடன்,
எஸ். சிவசிதம்பரம்.
பட்டுக்கோட்டை.     

SITE MAINTAINED BY

S . சிவசிதம்பரம்