scroll

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - பட்டுக்கோட்டை வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஆடுகளைத்தான்கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல;ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின். -அம்பேத்கர்

Wednesday, 19 September 2012

ஈழத்தமிழருக்காய் தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தீக்குளித்த விஜயராஜ் இன்று உயிரிழந்துக்கதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு கண்டனம் சேலத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு
நேற்று காலை அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் போர்க்குற்றவாளியான அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார்.அத்துடன் திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார்.
80 வீத உடல் எரிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்தநிலையில் அவர் இன்று சிகிச்சை பயனின்றி சாவடைந்துள்ளார்.
தமிழ் ஈழ ஆதரவாளரான விஜயராஜ் பெரியார் பற்றாளர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
விஜயராஜ் தினம் டயரி எழுதும் பழக்கமுடையவர். வைகோ. சீமான். கொளத்தூர் மணி கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும்போது. அங்கு ஏற்படும் உணர்வுகளை தனது டயரியில் பதிவு செய்து வந்துள்ளார். தீக்குளிப்புக்கு முன்பு அவர் தனது டயரியில் எழுதியிருப்பதாகக் கூறியதாவது.
இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள். டாங்கிகள். போர் விமானங்கள் என்பவற்றைக் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம் இழைத்துள்ளது.
இந்திய மத்திய அரசும். சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தைப் பார்த்து தமிழர்கள் ராஜபக்ஷவை செருப்பால் அடிக்க வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன்.
ராஜபக்ஷவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபக்ஷவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. என தீக்காயங்களுடன் நேற்று அவர் தனது வேதனையை வெளியிட்டிருந்தார்.
அத்துடன்”இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிப்பதே ராஜபக்ஷவின் வேலை. ஈழத்தமிழர்களின் வீழ்ச்சிக்கு இந்திய அரசும் அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசும்தான் காரணம். என்னைப் பற்றி யாரும் கவலைகொள்ள வேண்டாம்.ஈழ மக்கள்மீது அக்கறை கொள்ளுங்கள்” இவ்வாறு நேற்று அதிகாலை சேலத்தில் தன்னைத்தானே தீ மூட்டிக்கொண்ட விஜயராஜ் எழுதிய 36 பக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”இலங்கை தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு முழு பாதுகாப்பும் சுதந்திரமும் கிடைத்தால் தான் என் ஆத்மா சாந்தியடையும். ராஜபக்ஷ இந்தியா வரக்கூடாது” என அவர் தனது கடிதத்தில் இந்திய மத்திய அரசு.தமிழக முன்னாள் அரசு.இலங்கை ஜனாதிபதி ஆகியோரை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.
விஜயராஜ் எழுதிய 36 பக்ககடிதம் ஒன்று பொலிஸாரிடம் கிடைத் துள்ளது. இந்த கடித புத்தகத்தை ஓட்டோவில் இருந்து கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்மோகன்சிங், சோனியா, ராஜபக்சே மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் : விஜய் உடலை வாங்க மறுத்து கதறல் – ஆர்ப்பாட்டம்
 ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து நேற்று தீக்குளித்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-vijayarajsadalam%20(3).jpg
‘’எப்.ஐ.ஆர் காப்பியை பார்க்க அனுமதிக்க வேண்டும்,  கைப்பற்றப்பட்ட 36 பக்க கடிதத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்,
அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, ராஜபக்சே ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.  அப்படி செய்தால்தான் நாங்கள் உடலை வாங்குவோம்’’ என்று பிடிவாதமாக இருப்பதோடு அல்லாமல்,  உடலை போஸ்ட்மார்டம் செய்வதற்கும் அனுமதி அளிக்காமல் உள்ளனர்.
விஜயராஜ் உறவினர்களோடு, அனைத்திந்திய பெருமன்றம், விடியல் பெண்கள் மையம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்,  மருத்துவர்கள் மற்றும் போலீசார் சமாதானம் பேசிவருகின்றனர்.
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-vijayarajsadalam%20(2).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-vijayarajsadalam%20(4).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-vijayarajsadalam%20(5).jpg

SITE MAINTAINED BY

S . சிவசிதம்பரம்